Chillzee KiMo Books - நீ மீண்டு(ம்) வா... மீரா ! - விஜயராணி : Nee meendu(m) vaa... Meera - Vijayarani

நீ மீண்டு(ம்) வா... மீரா ! - விஜயராணி : Nee meendu(m) vaa... Meera - Vijayarani
 

நீ மீண்டு(ம்) வா... மீரா ! - விஜயராணி

விஜயரானியின் இன்னுமொரு இனிமையான சிறுகதை! 

 

காதல் பிரிவதில்லை !

காதலனே ! நீ பிரித்திருக்கவில்லையெனில் ???!

காதல் சாவதில்லை !

காதலனே என் மனதை கொன்றிருக்கவில்லையெனில் !!!??

காதலுடன் என் கரம் பிடித்து ..

மனைவி என்றாய் ?? உன் தாய்க்கு மருமகள் என்றாய் !???

ஆசையுடன் உன்னை மணக்க நான் காத்திருந்தால் !

யாரோ ஒருவளை உன் மனைவி என்கின்றாய் ????

நீ சந்தோசமாய் விலகி செல்கின்றாய் !

உன்னை கண்டதே தோஷம் என்கின்றாய் !

என்னை கண்டவுடன் ! காதல் பேசும் உன் கண்கள் !

கந்தக அமிலம் உற்பத்தி செய்வது ஏனோ ?

மீரா இன்னும் ! அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை ! அவளது கரத்தின் நடுக்கத்தில் ! பத்திரிக்கை அவளது காலடியில் தஞ்சம் அடைந்தது ,

தாய் தந்தைஇன்றி வாடினாலும் ! மனம் தளராத மீரா ! இப்போது முழுவதுமாய் உடைந்துபோனாள் ! அவளது இதயம் போல திருமண பத்திரிக்கை படபடத்தது ...! கண்ணன் -மீரா பொருத்தமாய் இருப்பதாய் தோழியின் கிண்டலுக்கு , முகம் செவந்த நாட்கள் ,

ஏனோ மனதில் அமிலத்தை சுரந்தது ..

.என் கண்ணனுக்கா திருமணம் ??? என் முகவரிக்கு அனுப்பப்பட்ட அழைப்பு கண்ணன் எனப்பெயர்கொண்ட யாரவதா ?

கண்ணீர் துளிகளை அழுந்த துடைத்து எடுத்து பார்த்தாள் .

விவாஹ சுபமுகூர்த்தப்பத்திரிக்கை எனத்தொடங்கி ...மணமக்கள் செல்லவன் கண்ணன் ,செல்வி : சுவாதி

என இருவரின் புகைப்படங்கள் ...ஆம் என்னுடைய கண்ணன்தான் அவனது காதலைக்கூறும் கண்கள் மாறவேயில்லையே!!!! அவனது உடை ! அவனது பிறந்தநாளில் அவனுக்காய் பிரத்யோகமாய் ..சென்னையில் இருந்து அவளால் வருவிக்கப்பட்டது ...நீல நிறம் இவளது கண்களை ஜாபகப்படுத்துவதாய் , காதலுடன் சொன்ன என் கண்ணனா ? இன்னும் இரண்டு நாளில் இன்னொருவளின் உடைமை ????

பொங்கிய அழுகை ! கன்னத்தில் வழிந்து இதழில் தொட்டபோது உப்பின் சுவை உணர்ந்தாள் !

உப்பின் குணம் இரும்பையும் அரிக்குமாமே ??? என் இதயத்தை அரித்துவிட்டால் ???? எவ்வளவு நல்லாயிருக்கும் ??? இதுவரை எங்கோயோ தனிமைப்படுத்தப்பட்ட தொலைபேசி , தான் இருப்பதை பாட்டு பாடி காண்பித்தது , இயந்திரமாய் நடந்து எடுத்த மீராவுக்கு புதிய எண் அழைப்பில் வரவும் எடுத்தாள் ..ஹாலோ மீரா ! நான் கண்ணன் , சாரி மா பிளீஸ் ! என் நிலைமை ரொம்பவே மோசம் ! என்னை தாண்டி எல்லாமே நடந்துருச்சி !என்னால் இந்த திருமணத்தை நிறுத்தமுடியலை .உனக்கு யாரோ சொல்லி ! தெரியக்கூடாதுன்னு தான் நானே அழைப்பை அனுப்பினேன் ...ஹாலோ மீரா...ஹாலோ மீரா...!

லைன்ல இருக்கியா ??

ம் ..இருக்கேன் ..சொல்லுங்க !!

அதான் மீரா ...நீயா கேள்விப்பட்டு பிரச்......ம்ம் அது வந்து கஷ்டப்படக்கூடாதுன்னு !..நான் கால் பண்ணினேன் ! இது என் பிரண்ட் ஒருத்தன் நம்பர் ...அப்புறம் உனக்கு தெரியத்தான் அழைப்பு அனுப்பினேன் ..நீ வந்திடாதே ..! உன் முகத்தை பார்க்கும் சக்.........டிக் ...

மீராவின் கரம்பட்டு கட்டானது ... தரையில் மடிந்து அழுகத்தொடங்கினாள்

ஆக அவளுக்காவோ ! குற்றவுணர்ச்சியுடனோ ??! இந்த அழைப்பு இல்லை முழுக்க முழுக்க சுயநலம் !

எங்கே இவளால் பிரச்சனை வரக்கூடாது என முன்னெச்சரிக்கை !!!

அழைப்புக்கு முன் மனம் முழுவதும் கண்ணன் ...இப்போது அருவருப்பாய் மாறத்தொடங்கினான் !!!

இனி என்ன செய்வது ? கோயமுத்தூரில் இருக்க முடியாது !...தாய் மாமனின் தயவினால் கணினி பட்டப்படிப்பை முடித்து ..சிங்காநல்லூரில் மத்திய ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரியும் பெண்ணான தனக்கு யார் இருக்கிறார்கள் ? மாமனின் மருமகள்கள் தன்னை ஏற்றுக்கொள்வாரவர்களா ? கூடாது போக கூடாது ....அவருக்கு பாரமாய் இனியும் இருக்கக்கூடாது !!!