நிலவுடன் ஓர் இரவு! - விஜயராணி : Nilavudan oru iravu! - Vijayarani
 

நிலவுடன் ஓர் இரவு! - விஜயராணி

இனிமையான சிறுக்கதை!

 

 

அழகிய அவள் !

அவர்களுக்கென ஓர் இரவு !

அவளுடன்  ஓர் நிலவு !

இருந்தபோதிலும் கசக்கின்றதே !

உன் துணையின்றி !..தனிமையாய் ...!

வெண்ணிலா ! அந்த ஓவியத்தை பார்த்துக்கொண்டிருந்தாள் ! ஓர் அற்புத இரவு ! மரத்தின் அடிப்பகுதியில் ஒரு பெண்ணின் பக்கவாட்டு தோற்றம்..அருகில் அவளது பெண்மையின் , மெண்மையினை ஒரு ஆற்று ஓடை பிரிதிபலிக்கின்றது ...என்ன ஒரு அழகிய காட்சி !

அவளால் அந்த ஓவியத்திலிருந்து கண்ணை அகற்றவே முடியவில்லை !!! 

ஏய் நிலா  ! என்னடி ! உன்னையும் , இந்த ஓவியத்தையும் ஒண்ணா பார்த்தா ? எது நிஜம் ? எது ஓவியம் ? அப்படின்னு தெரியலையே ! தலையினை சாய்த்து கலகலவென சிரித்தாள் செண்பா !

செல்ல சுருக்கம் !!!

இந்த செண்பாவும் ,நம் நாயகி வெண்ணிலாவும் நெருங்கிய தோழிகள் ! செண்பா பள்ளிப்படிப்புடன் நின்றுவிட வெண்ணிலா இன்று எம்.பி .ஏ  முடித்து தனியார் நிறுவனத்தின் துணை மேலாளர் ! இன்று காலையில் தற்செயலாக ஆட்டோக்கு காத்திருக்கையில் செண்பாவின் தந்தை வாஞ்சிநாதன் பூர்விக நிலம் சம்பந்தமாய் வக்கீலை பார்க்க ஆட்டோவுக்கு காத்திருக்க ! அந்த சமயத்தில் வெண்ணிலா வாஞ்சிநாதனை அடையாளம் கண்டுகொண்டு அறிமுகமாக ...வருடங்கள் கடந்தும் தன் பிரிந்த மகளை பார்த்ததை போல் ! கண்கலங்க ....அங்கே அழகிய பாசப்பிணைப்பு ஆரம்பமானது .தன்  பால்ய தோழியினை காண வீட்டுக்கு வந்திருக்கிறாள் , , வெண்ணிலாவை சந்தித்து ..இப்போது இரு பெண்களும் செண்பாவின் வீட்டில் !

இனி!!!

செண்பாவின் தந்தை வாஞ்சிநாதன் ஒரு ஓய்வு பெற்ற தபால்த்துறை அலுவலர் ! தாய் தந்தை இழந்து

சித்தியிடம் வளர்ந்த  வெண்ணிலாவை சிறுவயதில் இருந்தே ..வாஞ்சிநாதன்-மரகதம் தம்பதிக்கு கொள்ளைபிரியம் ..

அங்கிள் ... ஆன்ட்டி!! என்று சுற்றித்திரியும்  அழகிய குட்டி சிறுமியினை கண்டால் யாருக்குத்தான் பிடிக்காது?

மரகதம் தன் மகளுக்கு மதிய உணவினை கொண்டு போகும் போது ,நிலாக்குட்டிக்கும் சாதம் ஊட்டுவாள் .

தாயன்பை உணராத கன்று ! இவளின் கரத்துக்குள் அடைக்கலம் புகுவாள் !

ஒருநாள் சித்தியின் பார்வையில் மரகதம் நிலாவிற்கு சோறூட்டும் காட்சி பட்டதுதான் தாமதம் ,ஒப்பாரி வைத்து  ஊரையே  கூட்டிவிட்டாள் ..தன் மகளாய் வளர்க்கும் நிலாவை பிரிக்க சதி செய்து ,இல்லாத பொல்லாத காரணம் சொல்லி மரகதம் நிலாவை பிரிப்பதாய் அழுத அழுகையில் வாஞ்சிநாதன் -மரகதம் தம்பதியினர் மாற்றலாகி !! சென்னைக்கே வந்துவிட்டனர் . பலவருடங்களுக்கு பிறகு இந்த சந்திப்பு !..

நிலாவுக்கு பிடித்தமான பலாச்சுளை பணியாரம், அரிசி முறுக்கு , பருப்பு அடையுடன் மரகதம் வந்து அமர்ந்தாள் !

நிலாம்மா ! வாடா ! சாப்பிடு ! உனக்கு பிடிச்ச அவுல் பிரியாணிக்கு ஊற போட்டுருக்கேன் ! நைட் டின்னர் இங்குதான் !

டைனிங் டேபிளின் முன்பு ,அனைவரும் அமர்த்தினர் !..நிலாவுக்கு பிடிச்ச பதார்த்தங்கள் பரிமாறப்பட்டன ..

நிலாவுக்கு இது முற்றிலும் புதிய அனுபவம் !

 

ம்ம் ஆன்ட்டி ! இந்த ஓவியம் அற்புதம்!!! எவ்வளவு அழகு !! எங்கு வாங்கினீங்க ??

ம்ம் அதுவாம்மா ! எங்கண்ணன் மகன் வரைந்த ஓவியம் ,என் தோழி மகளுக்கு திருமணத்திற்கு சென்றிருந்தேன் ..அப்போ எங்கண்ணன் மகன் வரைந்த ஓவியத்தை என் தோழி எனக்காய் கொடுத்தாள் !.. என்ன செய்ய???

காதலித்து திருமணம் செய்துகிட்டேன் ..அப்பவே எல்லாம் அத்துப்போச்சி ...எங்கண்ணன் பையன் கிருபா! சின்ன வயசிலையே , எதையாவது கிறுக்குவான் ..அத்தை ..அத்தைனு என்பின்னாடியே சுத்துவான் ...இவரை நினைச்ச மனசுல அவங்க பார்த்த வரனை ஏத்துக்க பிடிக்காம நான் வந்துட்டேன் ...அப்புறம் ஏதோ விச காய்ச்சலாம் !!!..கிருபா நடக்கமுடியாம பத்து வருசத்துக்கு அப்புறம் ஏதேதோ மருத்துவம் பார்த்து நடந்தானாம் ! அதுவும் என்னால் தான்..  ஐயோ என்னால தான் !..மரகதம் வெடித்து அழுக .. வாஞ்சிநாதன் ஆறுதலாய் அணைக்க !செண்பா தன்  தந்தையிடம் பொரிந்தாள் ..ம் அப்பா ! இப்ப நான் சொல்றதை கேளுங்க !...இந்த படத்தை சுவத்தில் மாட்டணும்னு அம்மா சொல்லும் போதே நினைச்சேன் ...அவங்க இதை பார்த்து அழுக போறாங்கன்னு ...உடனே கழட்டி குடோன் அறையில் போடுங்க ! ..