தமிழுக்கு அமுதென்று பேர் - சித்ரா கைலாஷ்
கிராமத்து பின்னணியில் அழகிய குடும்ப நாவல்!
1
சென்சிவப்பு உருண்டையாக தூரத்தே தெரிந்த இளம் சூரியனை விரையும் ட்ரெயின் ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டிருந்தாள் தாரிகா !
ஜூன் மாத சூரியன் ,தன் உக்கிரத்தை காட்டாமல் ,பெரிய சைஸ் நிலவு போல் காட்சி அளித்தது .
இதுபோல் இன்னும் எத்தனை காட்சிப்பிழைகள் உள்ளனவோ ,அவள் பார்க்க ,என்று நினைவு ஓடும் போதே
'வைத்தீஸ்வரன் கோயில் ' என்ற பேர் பலகை தோன்றி மறைய
குனிந்து தன் பெட்டியை இழுத்து மற்றும் பையை தோளில் மாட்டிக்கொண்டு திறந்திருந்த கதவு அருகே சென்று நின்றுக் கொண்டாள் .
ட்ரெயின் மெல்ல வேகம் குறைத்து நிற்க ,இறங்க எத்தனித்து சற்றென்று பதறி நின்றாள் !
அது ஒரு சின்ன ஸ்டேஷன் என்பதால் ,ஸ்டேஷன் ப்ளட்போர்ம் சின்னதாக இருக்க ,அது எங்கோ பாதி வழியில் முடிந்து ,இங்கே கட்டான்தரை மட்டுமே இருந்தது ,அதுவும் வெகு ஆழத்தில் ...
இதில் பெட்டி பையுடன் எப்படி குதிக்க என்று தயக்கம் வரும்போதே ,இந்த ஸ்டேஷனில் இரண்டே நிமிடம் தான் நிக்கும் வண்டி என்று டி டி ஆர் சொல்லி இருந்தது நினைவு வர ,மேலும் யோசிக்காமல் பெட்டியையும் ,பையையும் கீழே எறிந்து விட்டு ,கம்பியை பிடித்தவாறு ஒரு மாதிரி தொங்கி இறங்கினாள் !
எறிந்த இடத்தில் கோடு மாடாக கிடந்த சாமானை எடுத்துக்கொண்டு அவள் நகரவும் ,ட்ரெயின் கிளம்பவும் சரியாக இருந்தது .
அப்பாடா ஒரு கண்டம் தாண்டியாகி விட்டது ,அடுத்தது இந்த அத்துவான காட்டில் அவளை அழைத்து செல்ல வந்திருக்கும் நபரை கண்டு பிடிக்க வேண்டும் .
அவள் இங்கு இந்த ட்ரைனில் வருவதை ஸ்கூல் கரெஸ்பாண்டுக்கு சொல்லி இருந்த போது ,அவளை அழைக்க வீரா என்பவர் வருவார் என்று தெரிவித்து இருந்தார் .
வீரா நீண்ட நாட்களாக அவரிடம் பணியில் இருக்கும் ஆள் என்பதால் ஏதும் பயம் இன்றி அவள் வரலாம் என்றும் தெரிவித்திருந்தார் .
இப்போது அந்த வீராவை தான், தானே தேடி கண்டு பிடிக்க வேண்டும் போலும் .
அதற்கு முதலில் ப்ளட்போர்ம் நோக்கி நகர வேண்டும் என்பதால் மெல்ல நடக்க ஆரம்பித்தாள் .
ஆனால் அப்படி யாரும் இருப்பதற்கான சுவடே இல்லாமல் ஸ்டேஷன் வெறிச்சிட்டு கிடந்தது ,சற்று தூரத்தில் மணலில் சொகுசாக படுத்திருந்த நாய் தன் தலையை மட்டும் தூக்கி பார்த்து விட்டு ,அவளால் ஏதும் இடைஞ்சல் இல்லை என்பது புரிந்தது போல் சுருட்டிக்கொண்டது ..
அவள் கிட்டத்தட்ட அந்த இடத்தை நெருங்கிய போது ,சற்று தூரத்தில் கிடந்த பெஞ்சிலிருந்து கால் நீட்டி ஹாயாக உட்கார்ந்திருந்த உருவம் ,மெல்ல எழுந்து நின்றது .
சற்றே கலைந்திருந்த தலையும் ,பாதி கண் மூடி இருந்த பார்வையுமாக ,நிதான நடையில் அவளை நோக்கி வந்தது அந்த உருவம் !
சற்றே நெருங்க ,அப்படி ஒன்றும் சாதாரண தோற்றம் இல்லை அவனுக்கு என்று புரிந்தது .
சராசரிக்கு அதிகமான உயரமமும் ,உயரத்திற்கு ஏற்ற உடல் வாகுடன் ,முகத்தில் ஒரு வசீகரிக்கும் தன்மையுடன் நெருங்கி வந்த அவன் ,அவள் முன் நின்று
''தாரிக்கா '' என்றான் ஒற்றை வார்த்தையாக ,இருந்தும் கிரிஸ்பான குரலில் ,அதிக சத்தமில்லாத அதே பொழுதில் அழுத்தமாய் .
ஒரு வார்த்தை ,ஒரே ஒரு வார்த்தை ,அதை வைத்து இத்தனை அனாலிசிஸ் தேவை இல்லை என்ற முடிவுக்கு வந்த அவள் ,பளீரென்று அவனை பார்த்து புன்னகைத்து'' ஆமா '' என்றாள் .
புன்னகைக்கு பதில் புன்னகையோ ,தன்னை பற்றிய விளக்கமோ ஏதும் இன்றி அவன் ஒரு சிறு தலை அசைப்புடன் திரும்பி பக்கவாட்டில் தொடர்ந்திருந்த பிக்கெட் பென்ஸ் போன்ற அமைப்பில் இருந்த ஒரு இடைவெளியை நோக்கி நடக்க தொடங்கினான் !
''நீங்க ''என்ற அவளது அவசர கேள்விக்கு
''தமிழ் ''என்று அவன் பதில் அளிக்க ,ஏனோ அதை அவன் பேர் என்று புரிந்து கொள்ளாமல்
''நானும் தமிழ்தான் ,ஆனா உங்க பேரை கேட்டேன்'' என்றாள் சற்றே சிரிப்பாய்
அவன் திரும்ப கூட செய்யாமல் தொடர்ந்து நடக்க ..
அவள் கேள்விக்கான பதில் வேறு இடத்தில் இருந்து வந்தது
''தமிழ் தம்பி நீங்க என்ன இந்த பக்கம் ''என்றது ஸ்டேஷன் மாஸ்டர் .
''இவங்களை அழைச்சு போக வந்தேன் ,வீராக்கு ஜுரம் ராத்திரி திடீருன்னு ''என்றான் அதே ஆகற்சிக்கும் குரலில் !
''இவங்க யாரு உறவா ''
''நம்ம ஸ்கூல்ல டீச்சரா சேர வந்திருக்காங்க ,வரேன் ''என நிக்காமல் நகர ஆரம்பித்தான் .
ஏதடா இந்த ஊரில் அந்த கோட் போட்ட ஸ்டேஷன் மாஸ்டரை கடந்து வாசல் வழியாக செல்லும் பழக்கம் தான் இல்லை என்றால் ,
- தமிழுக்கு
- அமுதென்று
- பேர்
- சித்ரா
- கைலாஷ்
- tamilukku
- amuthendru
- per
- Chitra
- Kailash
- Village
- Family
- Romance