பூங்கதவே தாள் திறவாய்... - பத்மினி செல்வராஜ்
முன்னுரை:
Hi Friends,
இதுவரை தொடர்கதை எழுதிய நான் முதல் முறையாக ஒரு நாவலை எழுதலாம் என்று முயற்சி செய்திருக்கிறேன்... தொடர்கதை எழுதுவதற்கும் ஒரு நாவலை ஒரே நேரத்தில் எழுதுவதற்கும் பெரிய வித்தியாசங்கள்...
ஆனாலும் முடிந்த அளவுக்கு சுவாரஸ்யமாக கொண்டு செல்ல முயன்றிருக்கிறேன்...
கதையை பற்றி??
என்ன கதை என்று தெரியாமல் படிப்பதும் ஒரு சுவாரஸ்யமே..!!! அதனால் என்ன கதை இது என்று கதையை படித்து பாருங்கள்...இதுவும் ஒரு இனிய காதல் கதைதான்...
உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்..படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள்...Happy Reading !!!
இதழ்-1
விண்ணைத்தொடும் அளவுக்கு உயரமாக நின்றிருந்த அந்த வணிக கட்டிடத்தின் போர்டிகோவில் வழுக்கி கொண்டு வந்து நின்றது அந்த சொகுசு கார்...
அந்த காரின் செலுமையே அதில் வந்திருப்பவன் எப்படிபட்டவன் என்பதை உணர்த்த, அங்கு தயாராக காத்திருந்த வாலட் பார்க்கிங் உதவியாளர் ஒருவன் வேகமாக அந்த காரின் அருகில் ஓடி வந்தான்...
அவனை கண்டதும் காரின் உள்ளே ஓட்டுனர் இருக்கையில் இருந்தவன் தன் சீட் பெல்ட்டை தளர்த்தி விடுவித்து பின் அந்த இன்ஜினை நிறுத்தி அதில் இருந்த சாவியை எடுத்தான்....
பின் கார் கதவை திறந்து கொண்டு இறங்கியவன் தன் அருகில் வந்து பவ்யமாக நின்று கார் சாவியை வாங்க நீட்டி இருந்த தட்டில் தன் சாவியை போட்டான்...
பின் கை அடங்கும் அளவில் இருந்த தன் நோட்புக் கம்யூட்டர் இருந்த அந்த குட்டி பிரீப்கேசை எடுத்து கொண்டு தன் சட்டையில் மாட்டி வைத்திருந்த அந்த கூலரை எடுத்து ஷ்டைலாக அணிந்து கொண்டு அந்த கட்டிடத்தை நோக்கி நடந்தான்....
ஆறடிக்கும் மேலான உயரம்..அவன் வேக நடைக்கு தகுந்த மாதிரி அலை அலையாக அசைந்தாடும் கேசம்.. தீர்க்கமான கண்கள்.. கூரான நாசி.. கச்சிதமாக நறுக்கிய மீசை..
உதட்டில் ஒரு கம்பீரமும் சிறிது கர்வமும் குடிகொண்டிருக்க, பார்க்கும் ஆண்கள் பொறாமை படவும் பெண்கள் மயங்கி நிக்கும் தோற்றத்தில் இருந்தான்...
அவனின் கம்பீர நடையை கண்டு அந்த கட்டிடத்தின் நுழை வாயிலில் அதுவரை அமர்ந்திருந்த வாயில் காவலாளி வேகமாக எழுந்து நேராக நின்று சல்யூட் ஒன்றை வைத்தான்...
அந்த நெடியவனும் இலேசாக தலை அசைத்து லிப்ட் இருக்கும் பகுதிக்கு நடந்தான்....
அவன் நடக்கும் அழகை கண்டு அங்கிருந்த பெண்கள் திரும்பி பார்த்து வியந்தனர்....
நேராக லிப்ட் ஐ அடைய, அது அப்பொழுதுதான் கீழ வந்திருந்தது... மற்றவர்கள் அடித்து பிடித்து உள்ளே செல்ல , அவன் மெதுவான நடையுடன் கடைசியாக உள்ளே சென்றான்...
அங்கிருந்த பெண்கள் சிலர் ஆவலாக அவனை ரசித்து பார்க்க, அதை கண்டு அவன் உதட்டோரம் ஏளனமாக வளைந்தது...
தன் பாக்கெட்டில் வைத்திருந்த ஐ-போனை எடுத்து அவசரமாக தனக்கு வந்திருந்த மெசேஜ்களை பார்வையிட்டான்....
அதற்குள் அவன் இறங்க வேண்டிய தளம் வந்திருக்க, தன் ஐ-போனை மூடி மீண்டும் பாக்கெட்டில் வைத்து கொண்டு தன் பிரீப்கேசுடன் லிப்ட் ஐ விட்டு வெளியேறினான்...
அதுவரை அவனை கண்ணாலயே பருகியவர்கள் ஒரு ஏக்க பெருமூச்சை விட்டனர்....
இப்படி ஒருவன் தனக்கு கணவனாக கிடைத்தால் எப்படி இருக்கும்?? என்று கற்பனை பண்ணிய சில பெண்கள் தங்கள் கனவு நாயகன்களின் லிச்ட் ல் அந்த நெடியவனையும் சேர்த்து கொண்டனர்...
லிப்ட் ஐ விட்டு வெளியில் வந்தவன் அங்கு இருந்த அலுவலகத்தின் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றான்...
நேராக ரிசப்சனுக்கு சென்று தன்னை அறிமுகபடுத்தி கொள்ள, அந்த ரிசப்சனிஷ்ட் உடனே வேகமாக எழுந்து மார்ச் பாஷ்ட் ல் அட்டேன்சனில் நிற்பதை போல நின்று அவனுக்கு வணக்கம் சொன்னாள்..
அவனும் புன்னகைத்து ஏற்று கொண்டு தனக்கு வேண்டிய தகவலை விசாரிக்க, அந்த பெண் கை நீட்டி அவன் செல்ல வேண்டிய வழியை காட்டினாள்....
அந்த பெண்ணிற்கு நன்றி சொல்லி தன் வேக நடையை தொடர்ந்தான்.. அந்த பெண்ணோ இன்னும் அதிர்ச்சி விலகாமல் அவன் செல்வதையே பார்த்து கொண்டிருந்தாள்...
சிறிது தூரம் சென்றதும் தாமஷ்( Managing Director) என்று எழுதி இருந்த அந்த அறையின் முன்னே நின்றவன் இலேசாக கதவை தட்ட, உள்ளிருந்து
“Yes.. Come in…” என்ற கம்பீர குரல் வந்தது....
அந்த குரலின் கம்பீரத்தை கண்டு அதிசயித்தவாறு அந்த கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றான் அந்த நெடியவன்....
அங்கு MD சீட்டில் அமர்ந்து ஏதோ பைலை புரட்டி கொண்டிருந்தவர் அந்த நெடியவனை கண்டதும் கண்கள் விரிய எழுந்து நின்றார்....
60 வயதிலும் இன்னும் சுறுசுறுப்பாகவும் குரலில் அதே அதிகார கம்பீர குரலையும் கண்டு திகைத்தான் அந்த நெடியவன்...
எழுந்து நின்றவர் வேகமாக முன்னே வந்து
“அடடா... அபி.. வா வா... உனக்காகத்தான் காத்துகிட்டிருக்கேன்... அது என்ன என்கிட்ட பெர்மிசன் கேட்டுட்டு உள்ள வர்ர.. நீ எப்ப வேணாலும் வரலாம்... நோ பெர்மிசன் ரிகுயர்ட்... “ என்று அவனை கட்டி கொண்டு தோளோடு அணைத்து கொண்டார்....
அவனும் அவரை அணைத்து பின் புன்னகைத்தான்...
பின் இருவரும் அறையின் உள்ளே நடக்க, பார்வையாளர் பக்கம் இருந்த இருக்கையில் அமர போனான் அந்த அபி....அதை கண்டவர் உடனே
“நோ... நோ.. அபி ... இது நீ உட்காரும் சீட் இல்ல... இங்க வா.. “ என்று அவன் கையை பிடித்து அழைத்து சென்று முன்பு அவர் அமர்ந்து இருந்த இருக்கையில், MD சீட்டில் அவனை உட்கார