Chillzee KiMo Books - இது என்ன மாயம் ..?.! - பிரேமா சுப்பையா : Idhu enna maayam..?.! - Prama Subbiah

இது என்ன மாயம் ..?.! - பிரேமா சுப்பையா : Idhu enna maayam..?.! - Prama Subbiah
 

இது என்ன மாயம் ..?.! - பிரேமா சுப்பையா

பிரேமாவின் கை வண்ணத்தில் உருவாகி இருக்கும் பத்து இனிய & வண்ணமயமான காதல் கதைகளின் தொகுப்பு!

 

இதுதான் காதலா...? இதுவும் காதலா ....!

ன் பெயர் பிரியா ........அப்பா, அம்மா, அக்கா, நான் இது தான் என் குடும்பம் ஒரு வருடம் முன்பு வரை, அக்காவிற்கு திருமணம் முடிந்து என் மாமாவும் இன்று அதில் ஓர் அங்கம்.

இப்போது எனக்கு அந்த திருமண சுழற்சி, என் தந்தையின் நெருங்கிய நண்பனின் மகனாம்...பெயர் பாரதிராஜன். நண்பர் இப்போது உயிரோடு இல்லையாம், அவரின் தாயார், சிறிய தந்தை மற்றும் சிற்றன்னை இன்று பெண் கேட்டு வருகிறார்களாம்... என் தாய் எனக்கு சொன்ன செய்தி.

எங்களுடையது மத்திய நடுத்தர குடும்ப வகையை சேர்ந்தது, இருவரும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் தான். என் தந்தை வேலை நிமித்தமாக இங்கே வந்துவிட சென்னை என் ஊர் ஆனது. திருவிழா மற்றும் பண்டிகை சமயங்களில் நான் ஊருக்கு சென்றுள்ளேன்.

இந்த அத்தையை பார்த்து பேசியுள்ளேன், அவர்களின் முதல் மகனிடம், மருமகளிடமும் பேசியதுண்டு, அவர்களுக்கு இரண்டு மகன்கள், இரண்டாம் மகன் பிறந்து ஆறு மாதம் ஆகிறது என்ற விவரம் வரை தெரிந்திருந்தாலும்   இந்த பாரதிராஜனை நான் பார்த்த நினைவு அவ்வளவாக இல்லை. சரி வரட்டும் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டு குளியலுக்கு கையில் புடவையுடன் சென்றேன்.

என்னடீ ......இன்னிக்கு சேலை கட்டிக்கிட்டா வேலைக்கு போக போற ....? என் தாய் என்னை ஆச்சர்யத்துடன் கேட்க....

ஏன்..... மா ....பொண்ணு பார்க்க வர அன்னிக்கு லட்சணமா புடவை கட்டுன்னு அக்காவ  என்ன திட்டு திட்டுனே ..? அதான் நான் ....என்று தாயின் ஆச்சர்யத்திற்கு விளக்கம் அளித்தேன்.

அவங்க 11 மணிக்கு வர போறாங்க அப்போ நீ எங்க இங்க இருக்க போற....நீ தான் வேலைக்கு போயிடுவியே .....? புடவைய கட்டுறேன்னு என் உயிரை வாங்காம போய் சுடிதார போட்டுக்கிட்டு கிளம்பு நேரமாச்சு .... அவளுக்கு நன்றாக தெரியும் நான் புடவை கட்ட............ அதோடு மல்யுத்தம் செய்து தோற்று.......... என் தாயாரை துணைக்கு அழைப்பேன் என்று,....... அப்படியும் எனக்கு அனைத்தும் சரியாக உள்ளது என்று திருப்த்தி வரும் வரை என் தாயை விட மாட்டேன்.

 எனவே என் தாய் என்னை மறந்தும் கூட புடவை கட்டேன் என்று கேட்டதே இல்லை .......

சரி இப்போது பிரச்சனை அது இல்லையே !........என்னை பெண் கேட்டு வராங்க...நான் இல்லாம ...? அம்மா ........கத்திகொண்டே அடுக்களையில் இனிப்பு கிண்டி கொண்டிருந்த என் தாயிடம் சென்றேன் ...

என்னடீ ......? ஏன் இப்படி கத்தி தொலைக்கிற ...மேல அந்த பாட்டி இருக்காங்க, என்று வீட்டு உரிமையாளர் பாட்டியை நினைவு படுத்த

அவங்கள விடும்மா.......என்னம்மா சொல்ற நீ ....? என்ன பொண்ணு பாக்க வர்றதா சொல்ற, என்னையும் வேலைக்கு போக சொல்ற ...?.நான் கேட்க வரும் கேள்வியை சரியாக புரிந்து கொண்ட என் தாய் சிரித்துக்கொண்டே, உன்ன பொண்ணு பாக்க வரல, பொண்ணு கேட்டு வராங்க ...........ஏதோ புத்திசாலிதனமாய் பேசிவிட்டதை போல் அவள் பார்க்க நான் முறைத்தேன்.

முறைக்காதடீ, மாப்பிள்ளை தம்பி ஞாயிற்று கிழமை உன்ன பார்க்க வருகிறாராம்.  அது கூட அவர் உன்ன பார்க்க இல்லையாம், நீ அவர பார்க்கவாம்..... அவர் உன்னத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு அவங்க அம்மாகிட்ட முடிவா சொல்லிட்டாராம்.

அவங்க கிட்ட சொன்னா போதுமா? நான் கோபப்பட

போன புதன் கிழமை உங்க அப்பா வேலையிலிருந்து வரும் போது அந்த தம்பியும் கூட வந்திருந்தாரு. உங்க பொண்ண கல்யாணம் பண்ணிக்க ஆசைபடுறேன், உங்க பொண்ண எனக்கு கொடுக்க சம்மதம்னா என் வீட்டு பெரியவங்கள பேச அனுப்புறேன்னு சொன்னாரு.

அப்பப்பா....என்ன ஒரு அடக்கம் தெரியுமா .... இங்க சென்னை ல ஏதோ பேரு சொன்னாருடீ .....எனக்கு புரியல ஆனா தம்பி   வெளி ஊரு எல்லாம்  போகும் போல  .....அவள் மாப்பிள்ளை புராணம் பாடுவதிலேயே தெரிந்துவிட்டது  என் அம்மா முடிவெடுத்து விட்டாள் என

ஏம்மா....அப்பாக்கு .....இதுல .....?

உங்க அப்பா தான் அன்னிக்கே "பொண்ணு கேக்க வர சொல்லுங்க மாப்பிள்ளைன்னு" சொல்லிட்டாரே, சும்மாவா கேட்டது அவர் நண்பரோட மகனாச்சே...........!

ஆக நீங்களே எல்லாம் கூடி முடிவெடுத்தாச்சு ..? கோபத்தில் நான் புடவையை கட்டிலில் போட்டுவிட்டு, சுடிதாரை எடுத்து கொண்டு  குளிக்க சென்று விட்டேன்.

மணி எட்டு, அலுவலகத்துக்கு நான் கிளம்ப, என் அம்மா,  என் அப்பாவிற்கு முன்  தட்டில் இட்லி வைத்து என்னிடம் நீட்ட,  வேறு வழியின்றி உண்டு தொலைத்தேன்.

என் அப்பா ஒரு தனியார் நாளிதழில் வேலை செய்யும் தொழிலாளி. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று வீர முழக்கம் இடும், பாசத்தை கூட கண்டிப்பாக வெளிப்படுத்தும் மானுடம். இன்னும் ஒரு வருடத்தில் ஒய்வு பெறப்போகிறார், இன்றும் அவர் பார்வைக்கு நான் நடுங்கி விடுவேன் ஆனால் அதை வெளியே காட்டாமல் என் தாயிடம்

"உன் புருஷன் முறைச்சிட்டா..? நான் அப்படியே நடுங்கிடுவேனா......? நான் ஒன்னும் பயந்து போய் இத செய்யல, எதோ பெரியவங்க சொல்றீங்க அந்த மரியாதைக்காக செய்யுறேன்", என்று வடிவேல் பாணியில் பல்வேறு விஷயங்களை சமாளித்த கதையெல்லாம் வேறு