என் மடியில் பூத்த மலரே - பத்மினி செல்வராஜ்
நாயகன் ஆதித்யா, முன்னேறி வரும் சிறந்த தொழிலதிபன். அவனுடைய திருமண வாழ்க்கை தோழ்வியில் முடிந்ததால், பெண்கள் மீது வெறுப்பாக இருப்பவன். எவ்வளவு தான் அவன் அம்மா வற்புறுத்தியும் மற்றொரு திருமணத்தை மறுத்து வருபவன். நாயகி பாரதி, கிராமத்து பெண். குடும்ப சூழ்நிலை காரணமாக குடும்பத்தின் பொறுப்பை ஏற்க வேண்டியதாகிரது. அதற்காக, ஆதித்யாவின் அம்மா திட்டப்படி , அவன் குழந்தைக்கு வாடகை தாயாகிறாள்.. ஆரம்பத்தில் ஆதித்யா பாரதியை வெறுத்தாலும், அவனுடைய குழந்தையின் வளர்ச்சியை பாரதியின் வயிற்றில் காணும் பொழுது, அவன் மனம் தானாக பாரதியின் பக்கம் சாய்கிறது. பாரதி அவன் காதலை ஏற்றுக் கொண்டாளா?? என்று தெரிந்து கொள்ள இந்த கதையை தொடர்ந்து படியுங்கள்...
1
“மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்!
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல்முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்…”
என்ற ஆண்டாள் திருப்பாவை இனிமையாக ஒலித்துக் கொண்டிருந்தது அந்த கிராமத்தில். அது ஒரு காவிரி நதிக்கரையில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்துல்ல கிராமம். காவிரி நீர் வாய்க்கால் வழியாக நேரடியாக அந்த ஊருக்கு வரும். எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என்று மின்னும் நெற்பயிர்களும், குலை குலையாக காய்த்து குழுங்கும் வாழை தோட்டங்களும், சாலையின் இரு புறமும் நன்கு உயர்ந்த தென்னை மரங்கலும் சூழ்ந்து ரம்யமாக இருக்கும் அந்த கிராமம் ஒரு காலத்தில்....
இன்று காவிரியில் நீர்வரத்து இல்லாததால் விவசாயமே தேய்ந்து போனது. எங்கயாவது ஒரு சில இடங்களில் மட்டும் சிலர் ஆழ்துளை கிணற்றின் மூலம் கொஞ்சமாக விவசாயம் செய்து வந்தனர்.. பாதி பேர் வேலை தேடி நகரத்திற்கு இடம் பெயர ஆரம்பித்திருந்தனர்..
அந்த அழகிய கிராமத்தில் இன்னொரு சிறப்பு அங்கு உள்ள கோயில்கள். எல்லா தெய்வங்களுக்கும் அங்கு கோயில்கள் உண்டு. அதனாலயே ஏதாவது ஒரு விஷேசம் எப்பவும் இருந்து கொண்டே இருக்கும்.
அதுவும் மார்கழி மாதம் என்றால் தனி சிறப்பு. மாதம் முழுவதும் அதி காலையில் அங்கு உள்ள பெருமால் கோயிலில் இருந்து திருப்பாவை ஒலிக்கும்..
மக்கள் அந்த இனிமையில் மயங்கி தங்கள் நாளை ஊற்சாகமாக தொடங்குவர்...
அன்றும் அதே போல் திருப்பாவையை ரசித்துக்கொண்டே தங்கள் அன்றாட பணிகளை ஆரம்பித்தனர்..
ஆனால் அந்த நாள் ஏன் விடிந்தது, இந்த இரவு இன்னும் நீண்டு இருக்க கூடாதா என்று அந்த அழகான கிராமத்தில் ஒரு உள்ளம் அந்த நாளை ஆரம்பித்து வைத்த ஆதவனை திட்டி கொண்டிருந்தது. அவள் தான் நம் கதையின் நாயகி பாரதி.
பாரதி 23 வயது நிரம்பிய பருவமங்கை. அந்த கிராமத்தின் எழிலரசியாக வளய வருபவள். கிராமத்துக்கே உரித்தான கள்ளம் கபடமற்ற முகம். அகத்தில் இருப்பதுதான் முகத்தில் தெரியும் என்பதை போல கள்ளம் கபடமற்ற, யாருக்கும் உதவும் அன்பான குணம் கொண்டவள். அதனாலயே பாரதி என்றால் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் அவளை பிடிக்கும்.
அதிலும் இளைஞர்களுக்கு இன்னும் ஒரு படி மேல் பிடிக்கும்.
என்னதான் எல்லாரிடமும் இயல்பாக பழகினாலும் தன்னை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பவர்களையும் , அத்து மீற நினைப்பவர்களையும் தள்ளியே நிறுத்தி வைத்து விடுவாள். அதனால் அந்த கிராமத்தில் சுதந்திரமாக சுத்தி வரமுடிந்தது.
ஆனால் இன்று அத்தனையும் இழக்க வேண்டுமே!! . அதிலும் இந்த அதிகாலையில் ஒலிக்கும் திருப்பாவையும் , கிராமத்து கோயில்களில் ஒலிக்கும் மணியோசை, அவள் தினமும் கேட்டு ரசிக்கும் அதிகாலை குயிலிசை, பக்கத்து வீட்டு சேவலின் கூவல் என்று அத்தனையும் இழக்க வேண்டுமே என்று மனம் வாடியது.
“ஒரு வேளை நான் எடுத்த இந்த முடிவு தவறோ “ என்று ஆயிரமாவது முறையாக அவள் மனம் முரண்டியது. பாதி மனம் நீ எடுத்தது சரியான முடிவு என்றும் மீதி பாதி மனமோ இது தவறான முடிவு என்றும் பட்டிமன்றம் நடத்தியது. ஆனால் முடிவுதான் கிடைக்கவில்லை.
இதே போல்தான் கடந்த இரண்டு வாரமாக திண்டாடினாலும் கடந்த இரண்டு நாட்களாக அடிக்கடி இந்த கேள்வி எழுந்து அவளை இம்சித்தது. யாரிடமும் ஆலோசனையும் கேட்க முடியவில்லை. நடப்பது நடக்கட்டும் என்று அப்போதைக்கு விட்டுவிட்டாலும் மீண்டும் அதே கேள்வி எழுந்து குழப்பும்..
அதுவும் இன்று தன் முடிவை செயல் படுத்த வேண்டிய முதல் நாள். அதை நினைக்கும் பொழுதே பாரதியின் உள்ளம் துவண்டது. ஒவ்வொரு நாளையும் உற்சாகமாக எதிர்கொள்ளும் பாரதிக்கு இன்று இந்த நாள் ஏன் வந்தது என்று இருந்தது...
பக்கத்து வீட்டில் வாசல் தெளிக்கும் சத்தம் கேட்கவும், பாரதி தன் கவலைகளை பின்னுக்கு தள்ளி அந்த நாளை துவக்க ஆயத்தமானாள்.
அருகில் அவளின் செல்ல தங்கை இந்திரா இவளை கட்டிகொண்டு தூங்கிகொண்டிருந்தாள். இனிமேல் யாரை கட்டிகொள்வாள். நானும்தான் இவள் அருகில் இல்லாமல் எப்படி இருக்க போகிறேன் என்று நினைத்து கொண்டே தங்கையை விலக்கி மெல்ல அவளின் கன்னத்தில் முத்தமிட்டு மெதுவாக எழுந்தாள்.
அவள் கண்கள் தானாக அந்த பக்கம் உறங்கி கொண்டிருந்த அவளின் அன்பு தம்பியை
- என்
- மடியில்
- பூத்த
- மலரே
- பத்மினி
- செல்வராஜ்
- en
- madiyil
- pootha
- malare
- padmini
- selvaraj
- Romance
- Family
- SoftRomance
- Tamil
- Novel
- Drama
- Books
- from_Chillzee