உன்னை விட மாட்டேன்... என்னுயிரே... - பத்மினி செல்வராஜ் : Unnai vida maatten... ennuyire - Padmini Selvaraj
 

உன்னை விட மாட்டேன்... என்னுயிரே... - பத்மினி செல்வராஜ்

உன்னை விட மாட்டேன்... என்னுயிரே ஒரு மோதல்+காதல் கதை. கதாநாயகன் நாயகிக்கு என்ன மோதல் வந்தது. அது எப்படி காதலாக மாறியது என்பதை கொஞ்சம் சுவராசியமாக எழுத முயற்சி செய்திருக்கேன்.. முழுக்க முழுக்க என்டர்டெய்ன்மென்ட்க்காக + ஷ்ட்ரெஷ் ரிலீப்க்காக எழுதிய கதை இது...I hope you enjoy this story. Happy Reading!!!

 

01

பொழுது இன்னும் சரியாக புலர்ந்திராத அந்த அதிகாலையில், அந்த திருமண மண்டபம் மாவிலை தோரணங்கலுடனும், அலங்கார விளக்குகளுடன் அழகாக மின்னி கொண்டிருந்தது.

வாயிலில் இரண்டு பெரிய வாழை மரங்கள் கம்பீரமாக நின்று எல்லோரையும் வரவேற்றுக் கொண்டிருந்தது..

“பவித்ரா வெட்ஷ் ஆதித்யா” என்று மலர்களால் அழங்கரிக்கப் பட்டிருந்த அந்த திருமண வரவேற்பு பலகை, அந்த விழாவின் நாயகன், நாயகி பெயர்களை அனைவருக்கும் அறிவித்து அழகாக வீற்றிருந்தது.

மண்டபத்தின் உள்ளே எங்கு திரும்பினாலும் அழகழகான பெண்கள் வண்ண வண்ண பட்டுபுடவையும் அதற்கு பொருத்தமாக அணிகலன்களும் அணிந்து ஜொலித்தனர். எல்லார் முகத்திலும் திருமணத்திற்கே உரித்தான மகிழ்ச்சி நிறைந்து இருந்தது.

அதுவும் மணட்பத்தின் வெளியே அணி வகுத்திருந்த கார்களும், மண்டபத்தின் உள்ளே உள்ள பெண்களின் கழுத்துகளில் மின்னிய வைரங்களும் அது ஒரு VIP வீட்டு திருமணம் என்பதை சொல்லாமல் சொல்லியது...

திருமண மேடை மிக அழகாக அலங்கரிக்கப் பட்டிருந்தது.. இந்த மேடைக்கு மட்டுமே பல லட்சங்கள் ஆகியிருக்கும்..

மேடையின் நடுவில் வீற்றிருந்த ஐயர் ,திருமண சடங்குகளுக்கான வேலைகளை ஆரம்பித்து இருந்தார்..

அந்த விழாவின் நாயகனும் நாயகியும் தயாராகி கொண்டிருந்தனர்..

(இன்னும் திருமணம் ஆரம்பிக்க சிறிது நேரம் இருப்பதால் வாங்க ப்ரென்ட்ஷ், நாம் அவங்க என்ன செய்யறாங்கனு பார்த்துட்டு வரலாம் .. )

மணமகன் அறை :

மணமகன் அறையில் நம் கதையின் நாயகன் ஆதித்யா மணமகனுக்கான ஆடையில் தயாராகிக் கொண்டிருந்தான்..

ஆதித்யா, சென்னையில் பிரபல தொழிலதிபர்களில் முதல் பத்து இடத்தில் இருப்பவன். ஆறடி உயரம், அலை அலையாக அடர்ந்த கேஷம், ஆனால் முகத்தில் மலித்த மீசை கொழுகொழு கன்னங்கள், பார்த்த உடன் பெண்களை கவரும் கம்பீரம் என அனைவரும் விரும்பும் சாக்லெட் பாய்..

மிகவும் சிறிய வயதிலேயெ, தன் தந்தையின் தொழிலில் ஈடுபட்டவன் தன் கடும் உழைப்பால் கிடுகிடுவென வளர்ந்து தொழில் சாம்ராஜ்ஜியத்தில் தனக்கென தனி இடத்தை பிடித்தவன்... தொழில் தொடங்க விரும்பும் இன்றைய தலைமுறையினருக்கு ரோல்மாடலாக விளங்குபவன். .

சாதாரணமாகவே பெண்களை கவருவன், இன்று திருமண உடையில் ராஜகுமாரனாக விளங்கினான்...

ஆதித்யா தயாராகி கொண்டிருக்கும்பொழுது அவன் நண்பன் அவனை பார்த்து

“டேய் மச்சான், சூப்பர் ஆ இருக்கடா.. கல்யாண கலை அப்படியே தெரியுது.

ஆனால் என்னடா இதெல்லாம்??? கல்யாணமே வேண்டாம் . கல்யாணம் என்பது ஒரு குடும்ப சங்கிலி.. அதிலெல்லாம் மாட்டிக்க மாட்டேன்.. லைப் புல்லா சுதந்திரமா இருக்கனும், லைப் என்ஜாய் பண்ணனும் அப்படினு பக்கம் பக்கமா வசனம் பேசுவ....

இப்படி திடீர்னு கல்யாண பத்திரிக்கைய நீட்டிட்ட? என்னடா ஆச்சு உனக்கு? “

ஆதித்யா பதில் எதுவும் சொல்லாமல் புன்னகைத்தான்....

“டேய் அதுவும் உன்னோட அந்தஷ்த்துக்கும் , அழகுக்கும் எத்தனையோ தொழிலதிபர்கள் வரிசையில் நின்னாங்களே உனக்கு பொண்ணு கொடுக்க.. எத்தனை அழகான, வசதியான வீட்டு பொண்ணுங்க உன் பின்னாடி வந்தாங்க.. அவங்களை எல்லாம் விட்டுட்டு ஒரு மிடில் கிலாஷ், சுமாரான பொண்ணை போய் எப்படிடா புடிச்ச?? என்னால இன்னும் நம்பவே முடியலை..

“ஒருவேளை உனக்கு கல்யாணம் ஆசை வந்திருச்சுனா, நீ தான் எத்தனையோ பொண்ணுங்களோட சுத்தின. அதில் ஒரு பொண்ணை நிரந்தரமா வச்சுக்க வேண்டியதுதான..

அதை விட்டுட்டு போயும் போயும் இந்த பொண்ணை எப்படிடா செலக்ட் பண்ணின???

ஒரு வேளை அந்த பொண்ணு உன் வசதியை பார்த்து, உன்னை மடக்க , உனக்கு வஷியம் எதுவும் வச்சிட்டாளோ? “

“வஷியம் னா ? “ என்று புரியாமல் தன் நண்பனை பார்த்தான் ஆதி...

“அதான்டா கேரளாவுக்கு போய் ஏதோ ஒரு மை வாங்கி வச்சிட்டா, அப்புறம் நீ அவங்க சொல்றதெல்லாம் கேட்பியாம்.. எனக்கு என்னவோ அப்படி தான் ஏதோ உனக்கு வச்சுட்டாங்கனு தோணுது..

இல்லனா நீ எங்க... அந்த பொண்ணு எங்க.. இப்படி ஒரு கல்யாணம் உனக்கு தேவையா..

பேசாமல் இந்த கல்யாணத்தை நிறுத்திட்டு வேற ஒரு நல்ல பொண்ணா பாருடா” என்று புலம்பினான் நண்பன்..

அவனுக்கு பதில் சொல்ல திரும்பிய பொழுது,

"என்ன நிஷாந்த்.. இன்னும் ரெடியாகலையா? ஐயர் சடங்கை ஆரம்பிச்சுட்டு மாப்பிள்ளையை