Chillzee KiMo Books - எங்கே எனது கதை?? - பத்மினி செல்வராஜ் : Enge enathu kathai?? - Padmini Selvaraj

எங்கே எனது கதை?? - பத்மினி  செல்வராஜ் : Enge enathu kathai?? - Padmini Selvaraj
 

எங்கே எனது கதை?? - பத்மினி செல்வராஜ்

Hi Friends,

என் கதைகளை படித்து ஆதரவும் உற்சாகமும் அளித்து வரும் உங்களுக்கு நன்றி...

நம் வாழ்வின் எந்த ஒரு நிலையையும் படிப்படியாகத்தான் கடக்க முடியும்... உதாரணமாக, பள்ளி பருவத்தில் LKG ல் ஆரம்பித்து படிப்படியாக முன்னேறி பின் கல்லூரி அதன் பின் வேலை என்று முன்னேறுவதைப் போல, ஒரு எழுத்தாளரும் முதலில் ஆரம்பிப்பது சிறுகதை எழுதுவதில்...

அதே போல நானும் இந்த எழுத்துலகில் அடி எடுத்து வைக்கும் பொழுது சிறுகதை எழுத்தாளராக உள்ளே நுழைந்தேன்... அப்படி எழுதிய சிறுகதைகளில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி...!!!

இந்த கதைகளையும் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள்...

Hope you like my short stories as well.. Happy Reading!!!

- அன்புடன் பத்மினி

 

உனக்காக நான் இருப்பேன்

முன்னுரை:

சிறு வயதில் இருந்தே  எனக்கு கதை படிக்க ரொம்ப ஆர்வம்.. நிறைய நாவல்கள், சிறுகதைகள் வாசித்திருக்கிறேன்.. அந்த வகையில் புதியதாக எதாவது கதை  படிக்கலாம் என்று நெட்டில் தேடிய பொழுது எனக்கு அறிமுகமானதுதான் ChillZee இணையதளம்..

இதில் வெளியாகும் கதைகள் எல்லாம் சுவராஷ்யமாக இருக்க, அன்றிலிருந்தே ChillZee ன் தீவிர வாசகியாகி போனேன்..

3 வருடமாக ChillZee ன் வாசகியாக இருந்த நான் இங்கு வெளியாகும் அனைத்து படைப்புகளையும் பார்க்கும்போது எனக்குள் சின்ன ஆர்வம் நானும் ஒரு கதை எழுத வேண்டும் என்று J . அந்த ஆர்வத்தில் வந்ததுதான் எனது இந்த முதல்  சிறுகதை...

ChillZee ன்  சிறுகதை போட்டிக்காக நான் முதன் முதலில் எழுத ஆரம்பித்தது... எப்பொழுதுமே முதல் குழந்தை எல்லோருக்கும் ஷ்பெஷல்.. அந்த மாதிரி எனக்கு இந்த கதை  ரொம்பவும் ஷ்பெஷல் + பிடித்ததாக்கும்..... உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.. படித்து பாருங்கள்....

 

பொழுது இன்னும் சரியாக புலர்ந்திராத அந்த அதிகாலையில், அந்த திருமண மண்டபம் மாவிலை தோரணங்கலுடனும், அலங்கார விளக்குகளுடன் அழகாக மின்னி கொண்டிருந்தது.

வாயிலில் இரண்டு பெரிய வாழை மரங்கள் கம்பீரமாக நின்று எல்லாரையும் வரவேற்றுக் கொண்டிருந்தது..

“பாரதி வெட்ஷ் தயாளன்” என்று மலர்களால் அழங்கரிக்கப்பட்டிருந்த அந்த திருமண வரவேற்பு பலகை, அந்த விழாவின் நாயகன், நாயகி பெயர்களை அனைவருக்கும் அறிவித்து அழகாக வீற்றிருந்தது.

மண்டபத்தின் உள்ளே எங்கு திரும்பினாலும் அழகழகான பெண்கள் வண்ண வண்ண பட்டுபுடவையும் அதற்கு பொருத்தமாக அணிகலன்களும் அணிந்து ஜொலித்தனர். எல்லார் முகத்திலும் திருமணத்திற்கே உரித்தான  மகிழ்ச்சி நிறைந்து இருந்தது.

அதிலும்  மணப்பெண்ணிண் பெற்றோர்களுக்கோ மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்று இருந்தனர்.

பின்னே தங்கள் ஒரே மகளின் வாழ்வு கருகி விட்டதே என்று உடைந்து இருந்தவர்களுக்கு வரனாக தங்கள் மகளுக்கும் திருமணம் கூடி வந்து இதோ மணமேடை வரை வந்து விட்டாளே என்று நினைக்கும் பொழுதே நெஞ்ஜை அடைத்தது ஆனந்தத்தில்.

நொடிக்கு ஒரு தரம் அந்த ஆண்டவனுக்கு நன்றி செலுத்திய வண்ணம் திருமண  வேலைகளை கவனித்து கொண்டிருந்தனர்.

மணமகன் தயாளனுக்கோ சொல்லவே வேண்டாம். இரண்டு வருடமாக காத்திருந்து, தான் காதலித்தவளையெ கை பிடிக்க போகிறான் என்பதே அவன் திருமண மகிழ்ச்சியை இரட்டிப்பு ஆக்கி இருந்தது...நொடிக்கு ஒரு தரம் தன் அருகில் அமர்ந்து இருந்தவளையே இமைக்காமல் பார்த்து இருந்தான்.

இப்படி எல்லாரும் ஒரு வித  மகிழ்ச்சியில் நிறைந்து அந்த திருமணத்தை எதிர்கொள்ளும்பொழுது ஒரு ஜீவன் மட்டும் இந்த திருமணம் ஏன் நடக்கிறது. எப்படியாவது இது நின்று விடாதா என்று மனதுக்குள்ளே மருகி கொண்டிருந்தது..

இந்த திருமணத்தை எப்படியாவது நிறுத்தி விடுமாறு எல்லா தெய்வங்களிடமும் யாசித்து கொண்டிருந்தாள் அந்த விழாவின் நாயகி , மணப்பெண்  பாரதி....

மணமேடையில் அமர்ந்திருந்தவளின் கண்களில் கண்ணீர்த்துளிகள் எட்டிப் பார்த்தன ... இதோ இன்னும் சில நிமிடங்களில் அருகே இருக்கும் இவன் அவளுக்கு தாலி அணிவித்து கணவனாக போகிறான்... நினைக்கும் போதே சுளீர் என வலித்தது பாரதிக்கு ...

இந்த திருமணத்தை நிறுத்த அவள் எடுத்த அத்தனை முயற்சிகளும் தோழ்வி...  இல்லை தோற்கடித்தான் தயாளன் மணமகனாக அருகில் அமர்ந்திருப்பவன்.

தன் கண்களில் எட்டிப் பார்த்த கண்ணீர்த்துளிகளை உள்ளிழுத்துக்கொண்டு  மெதுவாக அவனை திரும்பி பார்த்தாள் பாரதி...  அவனும் இவள் எப்படியாவது தன்னை பார்க்க மாட்டளா என்று இவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

அதுவும் இன்று மணப்பெண் அலங்காரத்தில் தேவதையாக ஜொளித்தவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

அருகில் இருந்த அவனுடைய நண்பர்களுடைய கிண்டல்கள் எதுவும் அவன் காதில் விழவில்லை. தன்னை பார்த்த பாரதியை பார்த்து குறும்பாக கண்ணடித்தான்...  

அவனை பார்த்து முறைத்தாள் பாரதி...அவள் முகத்தில்  அவனை பார்த்து அப்படி ஒரு வெறுப்பு...

எப்படியாவது இந்த திருமணம் நின்று விடும் என்று கொஞ்சம் இருந்த நம்பிக்கையும் இழந்தாள் தயாளனின் இந்த செய்கையால்...  

“இவன் ஏன் இவ்வளவு பிடிவாதமக இருக்கிறான் தன்னை மணப்பதில்?? “ என்று யோசித்தவள் எண்ணங்கள் தானாக பின்னோக்கி சென்றன....  

பாரதி ஒரு  B.E. (Computer Science) பட்டதாரி....