(Reading time: 2.75 - 5.5 hours)
நெஞ்சோரமா என் நெஞ்சோரமா - சித்ரா கைலாஷ் : Nenchorama en nenchorama - Chitra Kailash
 

நெஞ்சோரமா என் நெஞ்சோரமா - சித்ரா கைலாஷ்

உதட்டில் பெரிய புன்னகையை கொடுக்கும் சூப்பர் ஸ்வீட் கல்யாணம் டு காதல் கதை.

 

01

''ல்லா சக் பண்ணு நிவி காது அடைக்காம இருக்கும்'' என்றான் தன் புது மனைவி காதோரமாய் நரேன் .

' லேசாய் கலங்கிய கண்களுடன் வழி அனுப்பிய அப்பா நினைவில் இருந்தவள் அவன் சொன்னதை கவனிக்கவில்லை' ,

''எச்சி கூட்டி முழுங்கு நிவி '' என்றான் அவன் மறுபடியும்

' ஓய் கொஞ்சம் கவனிக்கல அதுக்குள்ள எம் எஸ்(m s)மோடுக்கு போட்டியா நீ {மேஜர் சுந்தராஜன் ) இங்கிலிஷ்ல சொன்னது புரியலைன்னு தமிழ்ல உன்ன..... ,ரைட் ....... பதிலுக்கு '

''ஆகட்டும் எஜமான்னு '' சொல்லுவோமா என்று ஒரு நிமிடம் யோசித்து, வேண்டாம் இப்போவே மிரட்ட வேண்டாம் என்று அவனை பார்த்து கீற்றாய் புன்னகைத்து தலையை ஆட்டி வைத்தாள் '

கல்யாணம் நடந்து பதினைந்து நாட்களே ஆகி இருந்தது

கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ணா பல்கலைகழகத்தில் முடித்து சில நாட்கள் தாத்தாவுடன் இருக்க சிதம்பரம் சென்றவள் ,

அப்படியே முதல் பேத்தி என்பதால் தாத்தாவின் அதிக செல்லத்தையும் பாட்டியின் அருமையான சமையலையும் ஒரு கை பார்த்து கொண்டு அங்கேயே பக்கத்தில் ஏதாவது இயற்கை விவசாயம் செய்து கொண்டு இருந்து விடலாம் என்று நினைத்த போதுதான் அவசரமாய் திரும்பி வருமாறு அழைப்பு வந்தது

'சென்னையில் வீடு படு களேபரமாய் இருந்தது ,

இன்னும் இரண்டு நாட்களில் அவளை பார்க்க என்று நுாசிலாந்து மாப்பிள்ளை (முடிவே பண்ணியாகிவிட்டது போல ) வருகிறார் என்று '

''அம்மா விளையாடாதே இப்போ கல்யாணம் பண்ணிக்க முடியாது , வேலைக்கு போறேன் , கொஞ்ச நாள் ஆகட்டும்மா ''

''இல்லை கண்ணா இது உங்க அப்பா வோட நண்பர் ரகுவோட பையன் , நமக்கு ரொம்ப தெரிஞ்ச குடும்பம் டா , வயசு , உயரம் படிப்பு எல்லாம் அம்சமாய் பொருந்தி இருக்கு '' என்றாள் அம்மா ராஜம்

''ரகு அங்கிள் குடும்பம் தெரியும்ல , அவர் பையன் இவர் மூத்தவர் , இன்னும் ஒரு தம்பி உண்டு ,அந்த தம்பி இங்க மெடிசின் சேர்திருக்காம் ஸ்டான்லில......",

"நாம எல்லோரும் சேர்ந்து நம்ம ஊர் பக்கம் இருக்கும் கோவிலுக்கு எல்லாம் ஒரு டூர் போயிருக்கோம் , அதில் சிதம்பரம் கோயில்ல ஆரம்பிச்சு , வைதீஸ்வரன் கோயில் , மாயுரம் மயூரநாதர் ,தஞ்சை ப்ரிஹதீச்வரர் கோயில் எல்லாம் ஒரு சுத்து போயிருக்கோம் , உனக்கு நினைவிருக்காது அப்போ நாலு வயசு உனக்கு'' என்று முடித்தாள் .

''இப்போ அதுகென்னா நல்ல பழம் அவன்னு சொல்ல வரியா ''

''மரியாதையா பேசுடி இதெல்லாம் என்ன வார்த்தை''

''அப்புறம் என்னமா திடீர்ன்னு அவன் வந்து குதிக்க போறான்னு சொல்ற , மேல கேட்டா பக்தி டூர் பத்தி சொல்ற , என்னதான்மா சொல்ல வர ''

''நிவேதிதா நான் சொல்றன் மா இங்க வந்து உட்கார்" என்ற அப்பாவை அப்போ தான் கவனித்தாள்

அம்மாவிடம் அவள் பேசியது சற்றே அதிகம் என்று அவளுக்கே தோன்றவே பவ்யமாய் சென்று அப்பா அருகில் அமர்ந்தாள் .

'அப்பாவின் காலடியில் படுத்திருந்த பால் வெள்ளை ராஜபாளையம் வகையை சேர்ந்த லூகியை வருடியபடி காது குடுத்தாள் அவர் பேச்சுக்கு '

''நான் போன தடவை ஒரு கான்பிரன்ஸ் விசயமாய் ஜி ஆர் டி போன போது தான்மா ரகுவை பார்த்தேன் , அவன் இப்போ பெங்களூர் விட்டு இங்கே வந்து விட்டேன் என்றான் "

பேச்சு வாக்கில் அவன் மகனுக்கு பொண்ணு தேடுவதை சொன்னான் ,

'' நானும் உன்னை பத்தி சொன்னேன் ,''

'' பேச்சு வளர்ந்து நாளை நேருல வரதா சொல்லி இருக்கான்மா ''பையன் இ சி படிச்சிருக்கார் திருச்சி என் ஐ டில (nit)கொஞ்ச நாள் வேலை பார்த்திட்டு ,

மேல ms பண்ணிட்டு இப்போ நூசில டெலிகாம் கம்பெனி வேலை ,

நேருல பார்த்து பேசினேன் , எனக்கு பிடிச்சிருக்கு , அவர் லீவ் ல வந்திருக்கும் இந்த ஒரு மாசத்தில் கல்யாணம் முடிஞ்சா நல்லதுன்னு நினைக்கிறான் ரகு "

''நாளை நாம ஜி ஆர் டில மீட் பண்ணுவோம் , பொண்ணு பார்க்கிற நிகழ்ச்சி மாதரி இல்லாம ஒரு கெட் டொகெதெர்னு வச்சுகோயேன் , மிச்சத அப்புறம் முடிவு பண்ணுவோம்'' என்று முடித்தார் .

'அவளுக்கு தெரிந்தது இது ஒரு கண் துடைப்பு நாடகம்ன்னு , இருந்தும் அப்பா வார்த்தைக்கு மறுப்பு பேசி பழக்கம் இல்லை என்பதால் சம்மதித்தாள் தயக்கத்துடன் '.

'எல்லா தயக்கமும் அவனை கண்டதும் மறைந்து போனது' .

'அவளை விட ஒன்னு ரெண்டு இன்ச் தான் உயரம் இருப்பான் , மாநிறம் , ஆனால் அந்த கண்கள் அவளை கட்டி நிறுத்தியது ,

'நீண்ட வளைந்த புருவம் ( பார்லர் போயிருப்பானோ ) அடர்த்தியான சுருண்ட கண் இமை