உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - சித்ரா கைலாஷ்
One-of-a-kind கதை!
நகைச்சுவை இழையோடும் அழகிய காதல் கதை.
01
அந்த பெரிய தேக்கு மரக் கதவு திறந்தது . மஞ்சள் பூசிய அந்த கால actress vanitha வை போல் ஒரு உருவம் சிரித்த முகமாய் நின்றிருந்தது .வாஞ்சையாய் அவளை வா என்று அழைத்தது . தன் பெயர் வனிதா என்று அறிமுகபடுத்திக் கொண்டது .
அந்த பெயரை கேட்டவுடன் அவளுக்கு சிரிப்பு வந்தது , பெயர் பொருத்தமாய் தான் இருக்கிறது என சொல்லத் தோன்றியது , அவள் மனச்சாட்சி அவளை இடித்தது , அதாங்க இந்த seriala எல்லாம் heroinena பார்த்து அறிவுரை சொல்லுமே அதுதாங்க நம்ம மனோச்சாட்சி
இப்போதைக்கு மனோ , தன் கடைமையை ஆத்த' உ ன் பொழப்பே சிரிப்பா சிரிக்கும் பொது அவளை பார்த்து என்ன சிரிப்பு வேண்டி கிடக்கு' என்று என்னை மொத்தியது ......அதுவும் சரிதான் நாம வந்த வேலையை பார்போம் ...
வனிதாவின் பின்னே வழக்கமாக வரும் அந்த பெரிய ஹால் உள்ளே நுழைந்தேன்
சற்றே இருட்டாக இருந்த அந்த ஹாலில் எனக்கு முதலில் கண்ணில் பட்டது fireplace . அதனுள்ளே கனப்பு எரியவில்லை என்ற போதும் பார்க்க ரம்மியமாக இருந்தது.அதன் நேர் எதிரே பிரும்மாண்டமான சோபாசெட் burgundy கலரில் அசத்தலாக இருந்தது.அதன் இரண்டு பக்கமும் முக அலங்காரத்துடன் இருக்கும் மரத்தால் செய்து இரண்டு யானைகள் இருந்தன . இந்த செட்டப்பில் சற்று வினோதமாக தெரிந்தாலும் அது மிக்க வேலைப்பாடுடன் அழகாக இருந்தது.நேர் பின்ன மர மாடிபடிகள் .அதன் மீது ஏற முடிவில் இரண்டாய் பிரிந்து வெரண்டா போன்ற அமைப்பு நெடுக ஓடியது . அதன் சுற்றுப்புற தடுப்பை ஒட்டி நின்று பார்த்தால் கிழே ஹால் தெரியும்படி அமைந்திருந்தது .அந்த வெராண்டாவில் இரண்டாவதாக இருந்த கதவை திறந்து உள்ளே நுழைந்தபடியே இது தான் மா உங்க ரூம் முகம் கழுவிக்கிங்க நான் குடிக்க ஏதாவது கொண்டு வரேன் பிறகு பெரியம்மாவை பாக்கலாம் என்றுவிட்டு சென்றாள் . பரந்து பெருசாய் இருந்த ரூமை ஒட்டி ஒரு பால்கனி இருந்தது .அந்த பால்கனி வாசலின் இரு புரமும் பெரிய பிரெஞ்சு விண்டோஸ் இருந்தது. பிறகு ஆராய்ச்சியை வச்சுக்கலாம் என அவள் முகம் கழுவி கூந்தல் ஒதுக்க ,டீ வந்து சேர்த்தது.
பெரியம்மாவை பார்க்கவென வனிதாவுடன் செல்லும் போது மறுபடியும் மனோ அவளை இடித்தது .அதற்குள் இன்னொரு ஹால் போன்ற ஒன்றில் வனிதா பின்னே நுழைந்தவள் திடுக்கிட்டு நின்றாள்
அங்கே நல்ல உயரமும் வாட்ட சாட்டமாய்.........' இவர் தான் தேவ் வோட பாட்டியா தேவுடா ..
மனோ நீ சொன்னத கேட்ருகனும் போல '.....
'வாம்மா சாதனா ' என்றவரிடம் இல்லை நான் சஞ்சனா என்று வாய் வரை வந்த வார்த்தைகளை மென்று முழுங்கியபடி அவரை நோக்கி கால்கள் பின்ன சென்றேன்
இங்கேயும் கீழே உள்ளதுபோல் ஆனால் சற்றே சின்ன கனப்பு இருந்தது
அதன் முன்னே இருந்த சோபாவில் உட்காந்தபடியே பக்கத்துக்கு இருக்கையை தட்டி"" இங்கே வந்து உட்காருமா"" என்றார்
என்னது பக்கத்திலா ..... அவ்வளவு கிட்ட உட்கார்ந்து எப்படி கோர்வையாய் பொய் பேசுவது முருகா உனக்கு பாலபிஷேகம் பண்றேன் உதவு ...
மெல்ல அவர் அருகில் உட்கார "" மாதையன சிரமமில்லாமல் கண்டுபுடுச்சிட்டியா "" என்றார்
""இல்லமா ஒன்னும் கஷ்டமா இல்ல ,அங்கே கொடை ரோட் junctionla கூட்டமே இல்ல , இவர் மட்டும் தான் நின்னார் "
இப்போ சீசன் இல்லாததாலே கூட்டம் இருந்திருக்காது , நீ தனியே சென்னைல இருந்து வரதே எனக்கு சங்கடமா இருந்தது மா , தேவுக்கு அவசர வேலை வராம இருந்திருந்தா அவன் சென்னையில் இருந்தே உனக்கு துணையா வந்திருப்பான்
'ஐயோ அங்கதானே எல்லாம் ஆரம்பிச்சிது , உங்க தேவுக்கு அந்த முக்கிய வேலை வராம இருந்திருக்க கூடாதா '.....
""உன் அக்காவையும் கூட்டி வந்திருக்கலாமே மா உனக்கும் துணையா போயிருக்கும் நானும் பாத்திருப்பேன் ,சீசன் இல்லேனாலும் கொடைக்கானல் அழகு தான் வந்திருக்கலாமே "
'நீங்க அக்காவதான் பாக்கறிங்க' என சொல்லாமல் மறைக்க , முகம் மாறாமல் இருக்க தவித்து போனாள் .""அவளுக்கு லீவ் இல்ல அதான் அவ வரல "" என்றாள் அவசர அவசரமாக ..
லேசான புன்னகையில் முகம் பூக்க ""அவ இவனு தான் கூப்பிடுவாய அக்காவ"" என்றார் மென்மையாக
""அதூ ஒரு வயசு தான் வித்தியாசம் , அம்மா அஞ்சு வருஷம் முன்னே இறந்தப்புறம் நாங்க இன்னும் நெருங்கிட்டோம் ,இப்படி கூப்பிட்டு பழக்கிட்டுது ""...'அது என்னமோ உண்மைதான் அப்படித்தான் கூப்பிடுவா குட்டி பிசாசு என்றது மனோ '.
""உன்ன பார்த்ததே சந்தோசம்மா ,என்ன தேவும் வந்திருந்தா கண்ணு நெறஞ்சிருக்கும் , இங்க இருக்கும் பால முருகன் கோவில்ல நிச்சயம் பண்ணியிருக்கலாம் "" என்றார் கண்கள் மின்ன
ஐயோ தெய்வமே , பால முருகன் கோவிலா ,அந்த பாலபிஷேகம் கான்செல் போ என மனசுக்குள் இஷ்ட தெய்வம் முருகனை மிரட்டும் போதே ,அவள் முகம் சுனங்கியதோ என்னமோ ....
அதை அவன் வராத வருத்தம் என புரிந்து கொண்டு "" வர முடிஞ்சா கட்டாயம் வந்திருப்பான்