கண்ணாமூச்சி ரே! ரே ! - பிரேமா சுப்பையா : Kanamoochi re re! - Prama Subbiah
ஆறடி உயரம் அழகிய புருவம் ஆப்பிள் போலே இருப்பானே! (இருக்கிறானே)
அதனால் தானே இப்படி ஒரு காரியத்திற்கு சம்மதிச்சிதே! இதே மொக்கையா ஒருத்தன் கேட்டிருந்தா இதற்கு நீ ஓகே சொல்லியிருப்பியா? எப்போதும் போல் தன் வேலையை தொடங்கியது மனோவின் கள் மனது.
நல் மனதோ, மனோ எந்த தைரியத்துல இதுக்கு நீ ஒத்துக்கிட்ட?அந்த சேட்டோட மகன் வந்து செஞ்ச ரகளையாலா? இல்ல எட்டு லட்சம் கடன் தீருதேங்கிறதால ஒத்துக்கிட்டியா? எதுன்னாலும் எலிக்கு பயந்து புலி கிட்ட மாட்டின கதையா ஆகிட கூடாதே!
எலியோ, புலியோ, என் ரேஞ்சுக்கு இவன் கொஞ்சம் கம்மி தான், பரவாயில்ல அட்ஜஸ்ட்
பண்ணி சைட் அடிச்சிக்கிறேன் என்று ஆட்டம் போட்டது கள் மனது.
ஐயோ! நீங்க ரெண்டு பேரும் கொஞ்சம் சும்மா இருங்களேன், என் தலையே வெடிச்சிடும் போல இருக்கு என்று அதட்டி உள்ளே அமுக்கி வைத்தாள் மனோ என்னும் மனோகரி,
தான் மேற்கொண்டுள்ள ஏமாற்று வேலையை தன்னாலேயே ஜீரணிக்க முடியாத நிலையில். நாம் செய்யும் எந்த தவறான செயலுக்கும் நம் மனசாட்சியை விடவா பிறரின் பழிச்சொல் அல்லது பிறர் கொடுக்கும் தண்டனை நம்மை தாக்கி விட முடியும்?
ஆனால் ஏமாற்றும் எண்ணம் இல்லாமல் இருந்தாலும், வாழ்வின் ஏதாவது ஒரு தருணத்தில் எவரையாவது ஏமாற்றாமல் நாம் இருந்ததில்லை என்பது ஒரு கசப்பான உண்மை தான். காரணம் சூழ்நிலை என்ற பெயர் சூட்டி காலம் ஆடும் ஒரு
கண்ணாம் மூச்சி ஆட்டம்.
We are all prisoners of circumstance at one point or another.
ஏசி காரில் தான் பயணம் என்றாலும், மனோவிற்கு வேர்த்திருந்தது. கைக்குட்டையால் நெற்றி வியர்வையை துடைத்த வண்ணம் கோயம்புத்தூரிலிருந்து சென்னைக்கு காரை ஒட்டிக் கொண்டிருந்த ஆதித்யன் மேல் பார்வையை செலுத்தினாள்.
ஆடிக்கும் மேலான உயரம், உண்மையை துளைத்தெடுக்கும் கூரிய பார்வை, நான் அழுத்தமானவன் என்று பறைசாற்றும் சிரிக்க மறந்த உதடுகள், பணகாரக்களை, எவரையும் தன் பால் ஈர்க்கும் கவர்ச்சி, எந்த பெண்ணும் தன் கணவன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எண்ணக்கூடிய அனைத்து தகுதிகளையும் கொண்டிருந்தாலும், தன் முகத்தை மட்டும் ஏனோ கல்லென வைத்திருந்தான். அவன் கவனம் முழுவதும் தார் சாலையிலேயே இருந்தது.
“காலையில் அந்த சிவன் கோவிலில் அவனும், நானும், டாக்டர் சங்கரும் கூடி முடிவெடுத்து,பின் 9 மணியளவில் டிபன் முடித்து,11 மணியளவில் பத்திரம் பதிவு செய்துவிட்டு, டாக்டர் சங்கரிடமிருந்து விடைபெற்று பயணம் மேற்கொண்டது முதல் இதோ இப்போது மணி 3 ஆகிறது இது வரை ஒரு முறை கூட அவன் கவனமோ, ஓரப் பார்வையோ கூட என் மீது விழவில்லை, இந்த லட்சணத்தில் இவனின் மனைவியாக ஒரு வருடம் நடிக்க ஒப்புக் கொண்டேனே..! - என்று நினைக்கும் போதே மனோவிற்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.
எல்லாம் என் தலை எழுத்து, என் துரதிர்ஷ்டம் என்று தன் மேல் மனோகரிக்கு வெறுப்பாக வந்தது. ஏன் தான் டாக்டர் சங்கரிடம் வேலைக்கு சேர்ந்தோமோ? என்றிருந்தது. ஆனால் அதையும் விட்டால் அவளுக்கு வேறு வழியில்லையே, அவள் இப்போது ஒரு சூழ்நிலை கைதி ஆயிற்றே ! எல்லாவற்றிற்கும் மேலாக பசி வயிற்றை கிள்ளி எடுக்க அவளுக்கு ஆதித்யன் மேல் அளவில்லா கோபம் மூண்டது.
“ஏன்டா ? கொரில்லா குரங்கு உன் வயிறு மட்டும் என்ன கல்லுலயா இருக்கு, உனக்கு பசிச்சா மட்டும் தான் ஹோட்டலுக்கு போவியா....? ஒருத்தி பின்னாடி உக்காந்துட்டு வர்றாளேன்னு நினைக்க வேணாம். மாடு மாதிரி வளந்திருந்தா மட்டும் போதாது மண்டைல கொஞ்சம் மூளை வேணும். 9 மணிக்கு சாப்பிட்டோமே மணி கிட்டதட்ட 4 ஆக போதே, சாப்பிடனும்னு நினைப்பு வேண்டாம். இதுல வேற துரைக்கு பொம்பளைங்கன்னா ஏமாத்த பொறந்தவங்கனு நினைப்பு. இப்ப நீ தான்டா உன் தாத்தாவ ஏமாத்த போற! இந்த மனோ ஒன்னு சொல்றேன் தெரிஞ்சிக்கோ " ஆம்பளைங்க தான் பொண்ணுங்கள ஏமாத்தவே பொறந்திருக்கீங்க" என்று அவள் பொரிந்து தள்ளினாள்.
பெண் என்பவள் ஆண்களை ஏமாத்த பிறந்தவள் எனும் எண்ணம் ஆதிக்கு, பெண் என்பவள்
ஆண்களால் ஏமாற்றப்படுபவள் எனும் எண்ணம் மனோவிற்கு, எதிர் துருவம் இரண்டையும்
விதி என்னும் நேர்க்கோடு கண்ணாம்மூச்சி ஆட்டத்தில் இணைக்கிறதே இதில் யார்
தோற்பது...? யார் ஜெயிப்பது ...? விதி அறியுமா .....? இல்லை விதியை எழுதிய தெய்வம்
அறியுமா .? எல்லாம் அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம் .ஆனால் ஒன்று உண்மை, அவன்
ஆடும் ஆட்டம் அனைத்திற்கும் நிச்சயம் ஒரு காரணம் இருக்கும். மகத்தான மனித பிறவி
என்பது காரணமின்றி படைக்கபட்டிருக்காதே!
“ஐயோ .....! .....ஆண்டவா......., ஈஸ்வரா ..... என்னை பசியோடவே கூட்டிகிட்டு போற இந்த கொரில்லா குரங்குக்கு நிறையா பொம்பள பசங்க கொஞ்சமா ஆம்பள பிள்ளைங்க பொறக்கட்டும், இவன் பொண்ணுங்க பண்ற சேட்டைய தாங்க முடியாம இவன் தவிக்கட்டும். ச்சே .! என் அப்பா மட்டும் என்னை இப்படி விடாம போயிருந்தா” .என்று