Chillzee KiMo Books - பொக்கிஷம் - சசிரேகா : Pokkisham - Sasirekha

பொக்கிஷம்  - சசிரேகா : Pokkisham - Sasirekha
 

புதிய கதை.

 

 


பாகம் – 1.

  

முன்னொரு காலத்தில் காஞ்சியை ஆண்ட மன்னனின் ராஜ்யத்தில் பெரிய பிரச்சனை வந்தது, கொள்ளை நோய் திடீரென உருவாகி மக்களையும் விலங்குகளையும் கொஞ்சம் கொஞ்சமாக கொன்றுகுவித்தது, அந்த கொள்ளை நோய்க்கு மன்னனின் குடும்பமும் பாதிக்கப்பட்டது, கொள்ளை நோய்க்கான மருந்தை கண்டுபிடிக்க உத்தரவிட்டார் மன்னர்.

  

அதற்காகவே வைத்தியர்கள் பல மூலிகைகளை வைத்து ஏகப்பட்ட மருந்துகளை கண்டுபிடித்தும் ஒன்று கூட அந்த கொள்ளை நோய் முன் எடுபடவில்லை, சக்தி வாய்ந்த மருந்தால் மட்டுமே அந்த நோய் குணமாகும் என அனைவரும் சொல்லி கைவிரித்துவிட மன்னனோ துக்கத்துடன் ஆலயத்திற்குச் சென்றான், அங்கிருந்த பெருமாளை மனமுருகி வேண்டினான், கதறி கதறி அழுதான், கொத்து கொத்தாக மக்கள் இறந்துக் கொண்டிருப்பதற்கு நியாயம் கேட்டான், தனது குடும்பமும் பாதிக்கப்பட்டிருப்பதை சொல்லி வேண்டிக் கொண்டான்,

  

கொள்ளை நோய்க்கான மருந்து கிடைக்காவிடில் தனது ராஜ்யமே அழிந்துவிடும், உதவி செய்யுமாறு மனமுருகி பெருமாளை வேண்டியவன் அன்று இரவு மன வலியால் அரண்மனைக்கு திரும்பாமல் ஒரு இரவு அங்கேயே தங்கினான், அப்போது அவனது கனவில் காட்டில் ஒரு சித்தன் அவரிடம் கொள்ளை நோய்க்கான மருந்தை தருவது போலவும் அதைக் கொண்டு மன்னன் தனது ராஜ்யத்தை சரியாக்கிவிட்டது போலவும் வரவும் உடனே உறக்கம் கலைந்த மன்னன் கடவுள்தான் தனக்கு இப்படியொரு கனவை தனது கேள்விக்கு பதிலாக அளித்துள்ளதாக எண்ணி மகிழ்ந்தான்,

  

தான் கனவில் கண்ட வந்த சித்தனை தேடி அலைந்தான், ஒருவழியாக அந்த சித்தனையும் கண்டான், அவரின் காலில் விழுந்து கதறி கதறி அழ அந்த சித்தனும் மனம் இரங்கி உதவி செய்ய நினைத்து அவருடன் அவரது ராஜ்யத்தை காண வந்தார், அதற்குள் ஊருக்குள் இருந்த முக்கால்வாசி மக்கள் இறந்து அந்த ராஜ்யமே சுடுகாடு போல மாறியிருந்தது, அதில் மன்னனின் குடும்பத்தாரும் பாதிக்கப்பட்டு ஒவ்வொருவராக இறந்துக் கொண்டு இருப்பது தெரியவும் மன்னன் வருந்தினான், இனி தன் குடும்பத்தில் மிச்சம் இருப்பது தானும் தனது மகனும்தான், தனது வாரிசையாவது தனது உயிரை தந்து காப்பாற்ற வேண்டும் என நினைத்தான்.

  

சித்தனோ ஊரின் நிலைமையைக்கண்டு அங்கிருந்த பெருமாள் கோயிலில் சென்று தியானத்தில் அமர்ந்தார், அவரின் தியானத்தை கலைக்க மனம் வராமல் அவரை பார்த்தபடியே மன்னனும் அவனது மகனும் காத்திருந்தார்கள், 3 நாட்கள் கழித்து சித்தன் தியானத்தில் இருந்து விடுபட்டு மன்னனையும் அவரது மகனையும் ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றான், அது வெறும் காடு போல இருந்தது, அங்கு ஒரு குறிப்பிட்ட இடத்தை தோண்ட சொல்ல மன்னனும் அவரது மகனும் அந்த இடத்தை தோண்டினார்கள், சில அடி தோண்டியதில் அவர்களுக்கு ஒரு மண்பானை கிடைத்தது, அதை வெளியே எடுத்து சித்தனிடம் தர அவரோ அதை வாங்க மறுத்து உனக்கான பதில் இதுதான் என சொல்லிவிட்டு அக்கணமே காற்றில் மறைந்துவிட்டார்.

  

அவசர அவசரமாக அந்த பானையை பிரித்த மன்னர் உள்ளே வைரங்களும் மாணிக்க கற்களும் இருப்பதைக்கண்டு நொந்துப் போனார், இவைகளை வைத்து கொள்ளை நோயை எப்படி விரட்டுவது என தெரியாமல் விழிக்க அவனது மகனோ சித்தனின் பேச்சை சரியாக புரிந்துக் கொண்டு அந்த பானையில் இருந்த ஒரே ஒரு வைரக்கல்லையும் ஒரே ஒரு மாணிக்க கல்லையும் எடுத்துக் கொண்டு அவசர அவசரமாக ஊருக்குள் சென்றான்,

  

அவன் கண்ணில் பட்ட கொள்ளை நோயால் தாக்கப்பட்ட ஒரு பெண்ணின் முன் அந்த கற்களை காட்டினான், எதுவும் நடக்கவில்லை, குழம்பினான், அந்நேரம் சூரிய ஒளி பட அந்த கற்கள் ஒளி வீச அந்த ஒளி அந்த பெண்ணின் மீது விழ அவளின் கொள்ளை நோய் தானாக குணமாகியது, அதைக்கண்டதும் மகிழ்ந்தான், நேராக தன் தந்தையிடம் வந்து நடந்ததைக் கூற அவரும் மகிழ்ந்தார், ஆனாலும் கற்களை பற்றின விசயத்தை அறிந்தால் அக்கம் பக்கம் ராஜ்யத்தை சேர்ந்தவர்கள் வீணாக தங்கள் ராஜ்யத்தை அழிக்கவும் வாய்ப்புள்ளது என உணர்ந்த மன்னன் அதற்கு ஒரு வழியை கண்டறிந்தான்.

  

தன்னிடம் இருந்த சிறந்த சிற்பியை வைத்து தன்னிடம் இருந்த வைரக்கற்களையும் மாணிக்க கற்களையும் கொண்டு பெருமாள் நெற்றியில் இருக்கும் நாமத்தை போல