Chillzee KiMo Books - தீயாய் ஒரு காதல் - சசிரேகா : Theeyaai oru kathal - Sasirekha

தீயாய் ஒரு காதல்  - சசிரேகா : Theeyaai oru kathal - Sasirekha
 

புதிய கதை.

 


 

தீயாய் ஒரு காதல் – சசிரேகா.

  

பாகம் – 1.

  

”ஹலோ எம்கே ஆஸ்பிட்டல்” என பதட்டமாக ஒரு பெண்ணின் குரல் கேட்க மறுபக்கம் எம்கே ஆஸ்பிட்டல் ரிசப்ஷனில் இருக்கும் ஆண் ஊழியர்,

  

”ஆமா சொல்லுங்க என்ன விசயம்”,

  

”சார் இங்க ஒரு எமர்ஜென்சி ஃபயர் ஆக்சிடென்ட் ஆகியிருக்கு”,

  

”ஓ அப்படியா எந்த ஏரியா“ என்றான் பதட்டமாக,

  

”உங்க ஆஸ்பிட்டலுக்கு பக்கத்து தெருவுலதான் சார் விபத்து நடந்திருக்கு, இங்க ஒரு பொண்ணு தீ விபத்தால ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கா, ப்ளீஸ் ஆம்புலன்ஸ் அனுப்புங்க சார்”,

  

”இதோ உடனே அனுப்பறேன்” என சொல்லியவன் உடனே ஆம்புலன்ஸ் டிரைவருக்கு போன் செய்து விவரம் கூற ஆம்புலன்சும் அதிவேகமாக தீ விபத்து நடந்த இடத்திற்கு விரைந்தது.

  

அங்கு கருகி போன ஸ்கூட்டி முன்னால் பாதி உடல் தீயில் வெந்துப் போன ஒரு இளம் பெண் வலியிலும் வேதனையிலும் முனகிக் கொண்டிருக்க அவளை சுற்றி மக்கள் கூட்டமே கூடியிருந்தது, இன்னும் காவல் துறையினர் வரவில்லை, அதற்குள் ஆம்புலன்ஸ் வரவும் அதில் இருந்து டிரைவரும் உதவியாளரும் இறங்கி பாதிக்கப்பட்ட பெண்ணை வண்டியில் ஏற்றிக் கொண்டு நேராக ஆஸ்பிட்டலுக்கு வந்து சேர்ந்தனர்.

  

இது போல எமர்ஜென்சி வரும் போதெல்லாம் அந்த ஆஸ்பிட்டலில் இருக்கும் அனைவருமே ஒருவரைதான் நம்பிக்கையுடன் தேடுவார்கள், அவர்தான் டாக்டர் முரளி. இப்போதும் அவருக்கு போன் செய்து தொடர்பு கொண்டு,

  

”சார் ஒரு எமர்ஜென்சி வரமுடியுமா” என ஆஸ்பிட்டலில் இருந்து சக டாக்டர் ஒருவர் பேச முரளியோ,

  

”எனக்கு உடம்பு சரியில்லை சாரி வேற ஆளை பாருங்களேன்” என சோர்வாகச் சொல்ல அந்த டாக்டர் வியந்துப் போனார்,

  

இது போல முரளி என்றுமே சொன்னதில்லை, காய்ச்சலே வந்தாலும் கூட முடியாத நிலையிலும் எமர்ஜென்சி என்று சொன்னால் போதும் 5 நிமிடத்தில் அங்கு இருப்பான் ஆனால் இன்று இவ்வாறு பேசுவும் திகைத்த சக டாக்டர்,

  

”டாக்டர் முரளி என்னாச்சி உங்களுக்கு”,

  

”நத்திங்”,

  

”டாக்டர் பேஷன்ட் ரொம்ப சீரியஸ் கன்டிஷன்ல கொண்டு வரப்பட்டிருக்காங்க எங்களால இதை பார்க்க முடியலை, நீங்கன்னா கண்டிப்பா பேஷன்ட்டை பிழைச்சிக்க வைச்சிடுவாங்க கொஞ்சம் சீக்கிரமா வாங்க”,

  

”இல்லை இன்னிக்கு என்னால முடியாது நீங்களே பாருங்களேன்”,

  

”டாக்டர் விளையாடாதீங்க எங்களால முடிஞ்சா நாங்க ஏன் உங்களை கூப்பிடறோம் நீங்கதான் எவ்ளோ ரிஸ்க்கா இருந்தாலும் தைரியமா செயல்பட்டு பிழைக்க வைப்பீங்க பாவம் சார் பேஷன்ட் அவங்க கன்டிஷன் ரொம்ப கிரிட்டிக்கல்லா இருக்கு ப்ளீஸ் வாங்க”,

  

என சொல்ல மறுபக்கம் நீண்ட பெருமூச்சு வந்தது,

  

”ஓகே நான் வரேன்” என சொல்லி போனை வைத்துவிட்டான் முரளி.

  

சக டாக்டரும் முரளி வருகிறான் என்றதும் நிம்மதியடைந்து பேஷன்டுக்கு முதலுதவி செய்துக் கொண்டிருந்தார், அவரால் கூட அந்த பெண்ணை இந்த மாதிரி ஒரு தீ விபத்தில்