Chillzee KiMo Books - மன்னவன் வந்தானடி தோழி - சசிரேகா : Mannavan vanthanadi thozhi - Sasirekha

மன்னவன் வந்தானடி தோழி - சசிரேகா : Mannavan vanthanadi thozhi - Sasirekha
 

புதிய கதை.

 

 

பாகம் 1.

  

சில பரம்பரை பணக்காரர்கள் 7 தலைமுறைக்கு மேல் சொத்து சேர்த்தவர்கள் அவர்களின் தாத்தா, பாட்டன், பூட்டன் இப்படி யாரோ ஒருவர் கண்டிப்பாக இம்மண்ணை ஆண்ட மகாராஜாக்களின் காலகட்டத்தில் அவரின் விசுவாசத்துக்கு கீழ் குறுநில மன்னனாக மக்களை ஆண்டார்கள், மன்னராட்சி முடிவுற்ற போது அப்போதிருந்த குறுநில மன்னர்கள் ஜமீன்தார்கள் என தங்களை அடையாள படுத்திக் கொண்டார்கள். ஜமீன்தார்களின் காலம் முடிவுறும் வரை மக்கள் ஜமீனுக்கு கட்டுப்பட்டு வாழ்ந்தார்கள்.

  

தமிழகத்தில் இருந்த ஒரு பகுதி ஜமீனையும், மக்களையும் ஆட்சி செய்தவன் குணசேகரன், அவனுக்கு தெரியாது இன்னும் சில மாதங்கள்தான் இந்த ஜமீனும், ஜமீன்தார் என்கிற பெயரும் அதிகாரமும் எல்லாம் இருக்கும் என்று அறியாமல் ஜமீன்தாராக வலம் வந்த குணசேகரனின் ஒரே மகன் சேதுபதி பேரழகன்,

  

அவனது அழகால் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டவன், சூரிய வம்சத்தை சேர்ந்தவன் என்பதாலேயே அவனது முகம் சூரியன் போல தேஜசுடன் பொலிவாகவும், அரச வம்சம் என்பதால் கம்பீரமான தோற்றத்துடனும் வலம் வந்தான்.

  

குணசேகரனுக்கு ஏகப்பட்ட விசுவாசிகள் இருந்தார்கள், சிறு சிறு பகுதிகளாக ஆட்சி செய்யும் ஜமீன்தார்கள் கூட குணசேகரனுக்கு அடங்கி நடப்பார்கள், அந்தளவுக்கு அதிகார பலத்துடனும், ஆள் பலத்துடனும் இருப்பான், இவனுக்கு கீழ் சில சின்ன சின்ன ஜமீன்கள் கட்டுப்பட்டு இருக்கும், சில ஜமீன்தார்கள் விரும்பியே அவனிடம் விசுவாசமாக இருப்பார்கள்,

  

அதிலும் முதன்மையான ஜமீன்தார் இரும்பொறை, சந்திர வம்சத்தை சேர்ந்தவன் ஆனாலும் குணசேகரன் மீது அதிக அளவு விசுவாசம் கொண்டவன், குணசேகரன் கேட்டால் என்ன கண் அசைத்தால் கூட தனது தலையை துண்டாக்கி அதை காணிக்கையாக்கும் அளவு விசுவாசம் கொண்டவன்,

  

பொதுவாக சூரிய வம்சத்தை சார்ந்தவர்கள் காலம் காலமாக சந்திர வம்சத்தை சேர்ந்தவர்களை தங்களுக்கு கீழ் விசுவாசிகளாகவே வைத்திருந்தார்கள், தாங்கள் இடும் கட்டளைகளை சந்திர வம்சத்தார் ஏற்று நடப்பவர்கள் போல மாற்றி வைத்திருந்தார்கள், காலம் போக போக விசுவாசிகள் என பெயர் எடுத்தவர்கள் அடிமைகள் போல மாறிவிட்டார்கள், தாங்கள் அவ்வாறு மாறியது கூட பாவம் சந்திர வம்சத்தை சார்ந்தவர்களுக்கு தெரியவில்லை,

  

இரும்பொறைக்கு ஒரு மகன் சந்திரகாந்தன், ஒரு மகள் சந்திரகலா, தகப்பன் சொல்லை தட்டாதவன் சந்திரகாந்தன் என பெயர் எடுத்தான், தந்தைக்கு அடுத்து தான் ஜமீன் பொறுப்பை எடுத்துக் கொள்வதில் சிறிதும் நாட்டமில்லை ஆனாலும் அவனது நல்ல எண்ணத்தால் மக்கள் அவனை சின்ன ஜமீனாகவே பார்த்தார்கள் மதிப்பும் தந்தார்கள்,

  

சந்திரகலாவோ நாட்டிய மயூரி என பெயர் எடுத்தவள், அவளது நடனம் அற்புதமானது அதை பற்றி புகழ்ந்து பேசாதவர் எவரும் இருக்க மாட்டார். நாட்டியத்திற்காகவே தன்னை அர்பணித்துக் கொள்ளும் எண்ணத்துடன் வாழ்ந்தாள்.

  

இதில் குணசேகரன் தன் மகன் சேதுபதியின் 25 வயது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாட முடிவெடுத்து அதற்கான வேலைகளை அனைவருக்கும் பிரித்து தந்தார், பிறந்த நாளின் போது மகனுக்கு சிறந்த பரிசொன்றை தர நினைத்தார், அது ஜமீன் பதவியை தரலாம் தனக்கு அடுத்து அவன் மக்களை ஆளட்டும் என எண்ணினார்,

  

கூடவே தன்னைப் போல சூரிய வம்சத்தை சார்ந்த மற்றொரு ஜமீன்தார் சூரியவர்தனின் மகள் தனவந்தியுடன் சேதுபதி திருமணத்தை பேசி முடிவு எடுத்தார். தந்தை சொல் தட்டாத சேதுபதியும் அந்த திருமணத்தை மனதார ஏற்றுக் கொண்டான்,

  

ஆனால் அவனுக்கென பார்த்து வைத்த ஜமீனும் சரி அதை ஆளும் ஜமீன்தாரும் சரி, கெட்டவன், அயோக்கியன், இரக்க குணம் இல்லாதவன், மக்களை அடிமைகள் போல நடத்தி வந்தான், அதிலும் சந்திர வம்சத்தை சார்ந்தவர்களை கண்டாலே அவன் வெறுத்தான்,

  

சந்திர வம்சத்தை விசுவாசிகளாக நண்பர்கள் போல பார்க்கும் குணம் கொண்ட