Chillzee KiMo Books - கிபி டு கிமு - சுபஸ்ரீ முரளி : Kipi to Kimu - Subhashree Murali

கிபி டு கிமு - சுபஸ்ரீ முரளி : Kipi to Kimu - Subhashree Murali
 

இரு பெண்கள் தங்கள் சிக்கலை நேரில் காணாமல் கடித பரிமாற்றம் மூலம் எப்படித் தீர்க்கின்றனர் என்பதே இக்கதை.

 

அனைவருக்கும்   வணக்கம்,

  

காலம் காலமாக தகவல் பரிமாற்றம் என்பது பெரும்பாலும் கடிதம் மூலமாகவே நடைபெற்று வந்தது. இன்று தொழில்நுட்பம் நம்மைக் கடிதம் என்னும் அழகான விஷயத்தை மறக்கடிக்க வைத்தது.

  

கையெழுத்து என்பது ஒருவரின் மனநிலையைப் பிரதிபலிக்கும் கண்ணாடி. காதல் கடிதம், புதுமண பெண்  தன்  தாய்க்கு எழுதும்  கடிதம் போன்றவை எல்லாம் உணர்ச்சி  குவியல்களின் பொக்கிஷம் ஆகும்.   

  

இக்கதையில் நம்முடன்  இரண்டு பெண் கதாபாத்திரங்கள் மட்டுமே பயணிக்கப் போகிறார்கள். அவர்கள் மூலமாகவே மற்றவற்றை நாம் அறியப் போகிறோம்.

  

அவர்கள் தான் கிபி மற்றும் கிமு.

  

அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்

  

அவர்கள் சந்திக்கப் போகும் பிரச்சனைகள் என்ன

  

பார்ப்போம் வாருங்கள்.

  

நன்றி

  

சுபஸ்ரீ முரளி

  


 

கிபி டு கிமு 1.

  

அன்புள்ள கிமு,

  

ஹாய் !!! 

  

திஸ் இஸ் கிபி

  

என்னை நினைவு இருக்கா?

  

இல்லையா? (வெரி பேட்)

  

சரி நானே என்னை அறிமுகம் செய்துக்கிறேன். 

  

நான் சென்னைக்கு மிக அருகில் உள்ள கலை இன்ஜினியரிங் காலேஜில் ட்ரிபிள் ஈ பிரிவின் மூன்றாம் ஆண்டு மாணவி. இரண்டு வாரங்களுக்கு முன்பு எங்கள் கல்லூரியின் இருபத்தி ஐந்தாம் ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடும் வகையில் எங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட இருபது மாணவர்கள் சேலத்தில் உள்ள  உங்கள் தாய்மை கருணை இல்லத்திற்கு வந்திருந்தோம். நாள் முழுக்க உங்களோடு கழித்தோம் . . 

  

இப்ப . . . . இப்ப நினைவு வந்திருக்குமே ?

  

காலையில் நாங்கள் வந்ததும் எங்கள் அனைவரையும் உபசரிக்க நீயும் உன் இல்லத்தைச் சேர்ந்த சிலரும்  ரஸ்னா கொடுத்தீங்க. நான் கூட உதவுகிறேன் என ஒரு கிளாஸ் ரஸ்னாவை உன் மேல் தெரியாமல் கொட்டிவிட. .  . நீ  முதலில்  என்னை முறைத்து பின்பு நான் அசடுவழிவதைப் பார்த்ததும் சிரித்துவிட.

  

கிருஷ்ண பிரியா என நான் கையை நீட்ட

  

நீயும் கிருபா முல்லை  என எனக்கு கை கொடுக்க