Chillzee KiMo Books - புன்னகை என்பது காதலின் பல்லவி - சசிரேகா : Punnagai enbathu kathalin pallavi - Sasirekha

புன்னகை என்பது காதலின் பல்லவி - சசிரேகா : Punnagai enbathu kathalin pallavi - Sasirekha
 

சிறு கதை.

 


 

ஹேமா ஹேமா ஹேமா வாம்மா வாம்மா வாம்மா” என இன்ஜினியரிங் கல்லூரியில் ஒரு வகுப்பில்  மாணவர்கள் புதிதாக படிக்க வந்த பெண்ணை ரேகிங் செய்து பாட்டு பாட அந்த பெண்ணோ அவர்கள் முன்பு அழாத குறையாக நின்றாள்,

  

”ப்ளீஸ் அண்ணா என்னை விட்டுடுங்க” என அவள் கேட்க,

  

”அண்ணாவா ஹலோ நாங்கல்லாம் சீனியர்ஸ் புரியுதா ஹேமா” என மூர்த்தி சொல்ல அவளோ,

  

”சாரி சீனியர் என்னை விட்டுடுங்க ப்ளீஸ்” என அவள் அழவே,

  

”ஏய் ஏய் ஏன்மா? ஹேமா அழற இப்படி அழுதா உன்னை விடனுமா சொல்லு நாங்க சொல்றதை நீ செஞ்சா இதுக்கப்புறம் நீ இங்க படிக்கறவரைக்கும் உன் பக்கம் கூட நாங்க வரமாட்டோம் செய்றியா” என கேட்க அவளோ ம் என தலையாட்டினாள்.

  

”நல்ல பொண்ணு மூணாவது வருஷம் இன்ஜினியர் க்ளாஸ்க்கு போ அங்க கைலாசநாதன்னு ஒருத்தன் இருப்பான். அவன் பேரை சொல்லி கூப்பிடு, யார்ன்னு பார்த்து சரியா அவன் முன்னாடி போய் நின்னு பாட்டு பாடற அதுவும் நான் சொல்ற பாட்டுதான் நீ பாடனும் முடியுமா” என கேட்க அவளும் சரியென்றாள்,

  

”என்ன பாட்டு சீனியர்”,

  

“அப்படி கேளுடி என் ராஜாத்தி, நீ கொடிப்பறக்குது படம் பார்த்திருக்கியா போன வாரம் ரிலீஸ் ஆச்சே தலைவர் படம்”,

  

“பார்க்கலை”,

  

“பாரக்கலையா சரி விடு அதுல வர்ற பாட்டுங்க தெரியுமா”,

  

“தெரியும் கேட்டிருக்கேன் ரேடியோல”,

  

“ஆஹா அது போதுமே அந்த படத்தில அமலா ரஜினியோட காதலுக்காக ஒரு பாட்டு பாடுவாங்க, காதல் என்னை காதலிக்கவில்லைன்னு அந்த பாட்டை ஸ்ருதி பிசகாம நீ பாடனும் அதுவும் அவன் முன்னாடி அமலா பாடறது மட்டும் நீ பாடு நம்ம தலைவர் பாடின வரிகளை அவன் பாடிட்டான்னு வையேன், அதுக்கப்புறம் இந்த காலேஜ்ல யாரும் உன்னை ரேகிங் செய்ய மாட்டாங்க சரியா, ஒரு வேளை நீ பாடி அவன் பாடலைன்னு வையேன் உன்னை தினமும் ரேகிங் பண்ணிக்கிட்டே இருப்பாங்க என்ன பாடறியா”,

  

“ஆனா அந்த பாட்ல அது அந்த லைன் வருமே” என அவள் தயங்கி பேச மூர்த்தியோ,

  

“எது எந்த லைன் ஐ லவ் யுதானே, பாடு பாட்டு போட்டின்னு நினைச்சி பாடி வை தப்பில்லை சரியா? போ இந்த ரூம் விட்டு வலது பக்கமாக வராண்டால நடந்தா 10 வது ரூம் போ, நாங்க பின்னாடியே வருவோம் தப்பிச்சி எஸ்கேப் ஆகலாம்னோ இல்லை பாடாம வந்தாலோ அப்புறம் நீ கொண்டு வந்த சைக்கிளை வித்துட்டு பேரிச்சம் பழம் சாப்பிடுவோம்”,

  

“அய்யோ அது என் புது சைக்கிள். காலேஜ்க்கு போறதுக்காக அப்பா வாங்கித்தந்தாரு சைக்கிள் இல்லைன்னா திட்டுவாரு”,

  

“அப்ப சரி அந்த பயம் இருக்கட்டும், போய் நாங்க சொன்னதை செய் கிளம்பு” என மூர்த்தி சொல்ல ஹேமாவும் அமைதியாக அந்த அறையைவிட்டு வெளியேறினாள்,