Chillzee KiMo Books - பூவா? தலையா? - சசிரேகா : Poova? Thalaiya? - Sasirekha

பூவா? தலையா? - சசிரேகா : Poova Thalaiya? - Sasirekha
 

இரு தோழிகளுக்கும் நாயகன் ஒருவனே ஆனால் அந்த நாயகனுக்கு எந்த தோழி தனது வாழ்க்கை துணைவி என்பதுதான் கேள்வி அதற்கான பதில் அவர்கள் மூவரின் கையில்தான் உள்ளது இரு தோழிகளின் வாழ்க்கையில் நாயகனுடன் நடக்கும் நிகழ்வுகளே இக்கதையாகும்.

 


 

பாகம் 1.

  

கோவை.

  

கோவலன் கலைக்கல்லூரியின் பிரின்சிபால் உதயமூர்த்தி வெகுநேரமாக பஸ்ஸ்டாப்பில் காத்திருந்தார். நிமிடத்திற்கு ஒரு முறை தனது கைகடிகாரத்தில் நேரத்தை பார்த்தபடியே அக்கம் பக்கம் நோட்டமிட்டார். முழுதாக 10 நிமிடங்கள் கடந்த நிலையில் ஒரு அம்பாசிடர் வண்டி அவரின் பக்கம் வந்து நிற்க உதயமூர்த்தி பவ்யமாக பின்பக்கம் இருந்த ஈஸ்வரமூர்த்தியைப் பார்த்து கைகூப்பி வணக்கம் சொல்லிக் கொண்டே முன் பக்க சீட்டில் ஏறி அவர் அமர்ந்ததும் வண்டி புறப்பட்டது.

  

டிரைவர் இருக்கும் காரணத்தால் அங்கு யாரும் பேசாமல் அமைதி நிலவியது. உதய மூர்த்தியின் முகம் கலவரமாக இருந்தது ஈஸ்வர மூர்த்தியின் முகம் கவலையாக இருந்தது. வண்டியோ கூட்டமே இல்லாத சாலையில் பயணித்தது. ஈஸ்வரமூர்த்திக்கு இருந்த ஒரு கெஸ்ட் ஹவுஸ்க்குள் வண்டி சென்று நின்றது.

  

வண்டி நின்றதும் வாட்ச்மேன் ஓடிவந்து கார் கதவை திறக்க வண்டியில் இருந்து ஈஸ்வரமூர்த்தி இறங்கினார். அடுத்து உதயமூர்த்தியும் இறங்கினார் ஈஸ்வர மூர்த்தியோ வாட்ச்மேனிடம்,

  

”யாரையும் உள்ள விடாத” என அதிகாரமாகச் சொல்ல அவனும் பவ்யமாக கேட்டுக் கொண்டான், டிரைவரும் வண்டியை ஓரமாக ஷெட்டில் நிப்பாட்டிவிட்டு ஓய்வெடுத்தான், உதயமூர்த்தியும் ஈஸ்வரமூர்த்தியும் வீட்டிற்குள் சென்றார்கள். இதேபோல அவர்கள் இருவரும் பலமுறை இங்கு வருவதுண்டு செல்வதுண்டு, ஏதேனும் முக்கியமான விசயம் இருந்தால் மட்டுமே இங்கு வருவார்கள் இப்போதும் தலைபோகும் அளவு பிரச்சனை வந்த பின்புதான் உதயமூர்த்தி ஈஸ்வரமூர்த்தியிடம் விசயம் சொன்னார். அதைக்கேட்டதில் இருந்து ஈஸ்வரமூர்த்திக்கு இருப்பு கொள்ளவில்லை,

  

”என் பேரன் கோவலனை நம்பி கல்லூரியை பார்த்துக்கற பொறுப்பை தந்திருக்க கூடாது, ஏதோ படிச்சிருக்கான் நமக்கும் வயசாயிடுச்சி, அவனாவது நல்லபடியா பார்த்துக்குவான்னு நம்பி தந்தா இப்படி செய்றானே, எனக்கு அவனை நினைச்சா கோபமா வருது, கல்லூரியோட நிலைமையை நினைச்சா கவலையா இருக்கு” என வருத்தப்பட்டார். அதற்கு உதயமூர்த்தியோ,

  

”என்னதான் தம்பி படிச்சிருந்தாலும் வெளிநாட்டுல தானே படிச்சாரு, அங்க இருந்த பழக்கம் இங்கயும் விடலை, அங்க இருக்கற கல்லூரிகளை போல நம்ம கல்லூரியை மாத்தினாரு அதனால என்னாச்சி படிக்கற மாணவர்கள் ஒழுக்கம் கெட்டதுதான் மிச்சம், நானும் தம்பிகிட்ட எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டேன் கேட்க மாட்டேங்கறாரு, நல்ல பெயர் எடுத்த கல்லூரி இப்போ இந்த கல்லூரியை பத்தி ஊரே தப்பா பேசற அளவுக்கு கொண்டு வந்துட்டாரு.

  

மாணவர்களோட எண்ணிக்கையும் குறைய ஆரம்பிச்சிடுச்சி, 5 வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் எல்லாமே நல்லாயிருந்தது, இந்த 5 வருஷத்துல எல்லாமே மாறிடுச்சி, பேரன்ட்ஸ் கூட நம்பி அவங்க பிள்ளைகளை நம்ம கல்லூரியில சேர்க்க மாட்டேங்கறாங்க, இப்படியே போனா அடுத்த வருஷம் யாருமே வரப்போறதில்லை இருக்கற மாணவர்களை வைச்சி கல்லூரி நடத்தினா கூட இன்னும் இரண்டு வருஷத்தில கல்லூரியே காலியாயிடும் அப்புறம் கல்லூரியை இழுத்து மூட வேண்டியதுதான்” என சொல்ல கலங்கிப் போனார் ஈஸ்வரமூர்த்தி,

  

”அப்படி நடக்ககூடாது அந்த கல்லூரியை நான் தொடங்கினப்ப பல கனவுகளோட ஆரம்பிச்சேன், நிறைய கஷ்ட நஷ்டங்களுக்கு மத்தியில அந்த கல்லூரியை வழிநடத்தி பெரிசாக்கினேன், என்னோட அயராத உழைப்பு காரணமா கல்லூரிக்கு பேர் புகழ் கிடைச்சது. கோவலன்