சிறு கதை.
பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இருக்கும் வசதிகள் சாதாரண மிடில் க்ளாஸ் குடும்பங்களுக்கு இருந்ததில்லை, அதிகமாக பணம் இருந்தாலும் அவர்களுக்கு சந்தோஷம் வருவதில்லை பணத்திற்கேற்ப செலவினமும் கண்டிப்பாக இருக்கும், எந்தளவு பணம் வருகிறதோ அந்தளவு பணத்திற்கான செலவுகளும் எந்நேரமும் மிடில் க்ளாஸ் குடும்பங்களுக்கு உண்டு.
பத்தும் பத்தாத வருமானத்தில் பிழைக்க பழகி கொண்டவர்களில் அவளும் ஒருத்தி பெயர் செல்வி.
தனது நடுத்தர குடும்பத்தின் தேவையை பூர்த்தி செய்வதிலேயே அவளின் நாட்கள் ஓடிவிடுகிறது, ஆயினும் அவளால் முழுவதுமாக தேவைகளை பூர்த்தி செய்ய முடிவதில்லை. தேவைகள் அதிகரிக்க அதிகரிக்க கவலையும் புலம்பலும் தான் மிச்சம், புலம்பியே செல்வி தன்னை சமாதானம் செய்துக் கொள்கிறாள். அவ்வாறு புலம்பிக் கொண்டே பேருந்தில் ஏறினாள்,
”பஸ் டிக்கெட்டுக்கு பணம் கொடுத்தே நான் சம்பாதிக்கற பணம்லாம் காலியாயிடும் போல இருக்கு, விலைவாசி ஏறிக்கிட்டே இருந்தா வருமானமும் அதுக்கு ஏத்த மாதிரி ஏறினாதானே பிழைக்க முடியும், விலைவாசி மட்டும்தான் ஏறுதே ஒழிய வருமானம் இன்னும் கீழேயே போய்கிட்டு இருக்கு, எப்பதான் இந்த நிலைமை மாறுமோ” என புலம்ப கண்டக்டர் வந்தார்,
”செல்வி அக்கா தினமும் உனக்கு இதே பிழைப்பா போச்சி, எதுக்குதான் நீ இப்படி புலம்பறியோ”,
”உனக்கென்னப்பா, ராசா மாதிரி அரசாங்க வேலையில இருக்க என்னை எடுத்துக்க நான் படற கஷ்டம்லாம் பார்த்தா நீ ரத்த கண்ணீரே வடிப்ப”,
”எல்லாருக்கும்தான் கஷ்டம் இருக்கு, அரசாங்க வேலையில இருந்தா மட்டும் என்ன பிரயோசனம், எனக்கும் ஆயிரம் செலவுகள் இருக்கு அதுக்கே காசு போத மாட்டேங்குது”,
”அதுசரி நீயே இப்படி புலம்பினா எங்களை போல ஏழைங்க என்ன செய்வாங்க”,