Chillzee KiMo Books - இன்று நீ நாளை நான் - சசிரேகா : Indru nee naalai naan - Sasirekha

இன்று நீ நாளை நான் - சசிரேகா : Indru nee naalai naan - Sasirekha
 

திருமணம் ஆனதும் பெண்கள் தன் குடும்பத்தை விடுத்து கணவன் வீட்டிற்கு மருமகளாக செல்கிறாள் அதுவே ஒரு ஆண் திருமணம் ஆனதும் தன் குடும்பத்தை விடுத்து மனைவியின் வீட்டிற்கு மருமகனாக சென்றால் என்னாகும் என்பதே இக்கதையாகும்.

 


பாகம் 1.

  

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில்.

  

”அப்பா எனக்கு கல்யாணமே வேணாம்பா ப்ளீஸ்பா” என கண்ணீர் விட்டு கைகூப்பி தன் தந்தையிடம் கெஞ்சினாள் காவேரி ஆனால் அவளின் தந்தை சண்முகமோ அவளுக்கு மேல் கண்களில் கண்ணீருடன் கைகூப்பி தன் மகளிடம் கெஞ்சினார்,

  

”அம்மாடி, அப்படி சொல்லாதம்மா என்னோட மானம் மரியாதையெல்லாம் இந்த கல்யாணத்திலதான் இருக்குது, நீ கல்யாணமே வேணாம்னு சொன்னா அப்புறம் நம்ம குடும்ப மானம் போயிடும், எனக்காகவாவது நீ இந்தக் கல்யாணத்தை செய்துக்கம்மா”,

  

”எப்படிப்பா எல்லா விவரமும் தெரிஞ்சிருந்தும் என் மனசு புரிஞ்சிருந்தும் இப்படி சுயநலமா யோசிக்க முடியுது உங்களால“,

  

”என்ன செய்றதும்மா சில சமயம் காரியம் ஆகனும்னா சுயநலமா இருக்கறது தப்பில்லையே”,

  

”அப்பா உங்களைக் கெஞ்சி கேட்கறேன், உங்க மேல இருக்கற மரியாதையாலதான் நான் இன்னும் ஓடிப்போகலை, அந்த காரியத்தையும் என்னை செய்ய வைச்சிடாதீங்கப்பா, உடனே இந்த கல்யாணத்தை நிப்பாட்டுங்கப்பா”,

  

”நீ என்னோட பொண்ணு, நம்ம குடும்பத்துக்கு களங்கம் வர்ற மாதிரி எந்த ஒரு காரியத்தையும் நீ செய்ய மாட்டேன்னு எனக்குத் தெரியும், அந்த நம்பிக்கையிலதானே நான் இந்த கல்யாணத்தையே ஏற்பாடு செய்தேன்”,

  

”உங்களுக்கு இவ்ளோ பிடிவாதம் ஆகாதுப்பா, எப்படியிருந்தாலும் இந்தக் கல்யாணம் நிக்கதான் போகுது, அதுக்கு பதிலா நீங்களே இதை நிறுத்திட்டா இருக்கற கொஞ்சம் மரியாதையையாவது காப்பாத்திக்கலாமே”,

  

”இப்ப எனக்கு என்னோட மானம் மரியாதை பத்தியெல்லாம் கவலையில்லைம்மா, உன்னோட கல்யாணம்தான் எனக்கு முக்கியம்”,

  

”நடக்காத கல்யாணத்தை பத்தி பேசி என்ன லாபம்”,

  

”எனக்கு நம்பிக்கையிருக்கு, இந்த முறை நிச்சயம் இந்த கல்யாணம் நடக்கும்”,

  

”எனக்கு நம்பிக்கையில்லை, வழக்கம் போல இந்த கல்யாணம் நிக்கதான் போகுதுப்பா”,

  

”அப்படி நடக்க கூடாதுன்னுதான் நம்ம ஊரைவிட்டு 500 கி.மீ தள்ளியிருக்கற ஊர்ல உனக்கு சம்பந்தம் பேசினேன், இந்த கல்யாணத்தைப் பத்தி கூட நம்ம ஊர்பயலுக ஒருத்தனுக்கு கூட விசயம் தெரியாம பார்த்துக்கிட்டேன்”,

  

”அட போங்கப்பா 500 கி.மீ என்ன நீங்க கடல் கடந்து வேற நாட்ல கல்யாணத்தை வைச்சாலும், அதை நிப்பாட்டறதுக்காகவே வருவாங்கப்பா”,

  

”உன் பயம் எனக்கு புரியுதும்மா”“,

  

”இல்லைப்பா உங்களுக்கு புரியாது இதுவரைக்கும் 6 முறை என் கல்யாணத்தை நிப்பாட்டியிருக்காங்க, இது ஏழாவது முறை, இந்த முறையும் என் கல்யாணம் அவனுங்களால நின்னா சத்தியமா சொல்றேன் என் உசுரை நான் விட்டுடுவேன்பா”,

  

”அம்மாடி தங்கம் இப்படியெல்லாம் பேசாதம்மா, என் சாமி நீ, என்னை