Chillzee KiMo Series - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - பிந்து வினோத் : அத்தியாயம் 23

சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - பிந்து வினோத் - Sollamal thottu sellum thendral... - Bindu Vinod
 

Episode 23.

  

ப்போதும் லேட்டாக புருஷோத்தமன் வீட்டிற்கு வருகைத் தரும் நந்தினி, இப்போதெல்லாம் சீக்கிரமே வந்து விடுவது வாடிக்கையாக மாறி இருந்தது.

  

எஸ்.கே’வின் நள பாகத்தினால் வீட்டிலேயே அவள் காலை உணவை முடித்து வருவதும் வழக்கமாகி போய் இருந்ததால், தினமும் புருஷோத்தமனுக்கு ஊசியை போட்டு முடித்து விட்டு, சிறிது நேரம் புஷ்பாவிடம் கதை பேசுவதும் இப்போது வாடிக்கையாகி இருந்தது.

  

அன்றும் அப்படி தான் புஷ்பாவுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தாள்.

  

“என்னோட சமையல்ல இருந்து தப்பிச்ச சந்தோஷத்துல இருக்க மாதிரி இருக்கு டாக்டர்? அந்த எஸ்.கே சமையல் நானும் டேஸ்ட் செய்தேன். நல்லா தான் இருக்கு. பேசாம அவன் இந்த ஊருல ஒரு ஹோட்டல் நடத்தலாம்.”

    

   

 
 
 

Chillzee KiMo Series - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - பிந்து வினோத் - Sollamal thottu sellum thendral... - Bindu Vinod