Chillzee KiMo Books - கானல் ஆகுமோ காரிகை கனவு - சசிரேகா : Kanal akumo karikai kanavu - Sasirekha

கானல் ஆகுமோ காரிகை கனவு - சசிரேகா : Kanal akumo karikai kanavu - Sasirekha
 

முன்னுரை.

பெண்களின் மனதில் ஆயிரம் கனவுகள் உள்ளது அவற்றில் நிறைய கனவுகள் நிகழ் உலகில் நடப்பதில்லை அவற்றை வெளியிலும் சொல்வதில்லை ஒருவேளை ஒரு பெண்ணின் கனவுகள் அனைத்தும் பலித்தால் என்னவாகும் அவள் மனதில் தேங்கியிருந்த பல வருட கனவுகள் பலிக்கும் போது ஏற்படும் காதலும் அதனால் உருவான பிரச்சனைகளும் அவற்றில் இருந்து அவள் மீளுவாளா அவளது காதல் வெற்றிபெறுமா இல்லை அவளது கனவுகள் கானலாகிவிடுமா என்பதே இக்கதையாகும்.

 


  

பாகம் 1,

  

சென்னை,

  

2020 ம் வருடம் ஜனவரி மாதம் 10ம் நாள்,

  

காலை நேரம் மணி 6.00,

  

தனியார் மருத்துவமனையில்,

  

கண்கள் திறக்க கூட முடியாமல் போனது அபிநயாவால், அப்படி ஒரு கண் எரிச்சல் நெருப்பு போல எரிய சிரமத்துடனே கண்களை திறக்க முயன்றாள். முதலில் அவளால் முடியவில்லை அவளது உடலும் பலஹீனமாக இருந்தது, அவள் உடலை அவளாலேயே அசைக்க முடியவில்லை கட்டிப்போட்டது போல உணர்ந்தாள்,

  

இதில் தலையும் பாரமாக வலிக்கவே சொல்லவொண்ணா துயரத்தில் கஷ்டப்பட்டாள் அபிநயா, ஆனால், அவளுக்கு எப்போதும் இருக்கும் வில்பவர் மூலமாக தனது துயரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தவள் மெல்ல கண்களை திறக்கலானாள்.

  

காலை நேர வெளிச்சம் அவளது கண்களை கூச வைத்தது. இமைகள் படபடக்க எதிரில் தெரிபவை அனைத்தும் மங்கலாக இருக்க அவளுக்குள் பலவிதமான குழப்பம் எங்கு இருக்கிறோம் தனக்கு என்ன நேர்ந்தது என அறிய சிரமத்தை பாராமல் கண்களை அகல திறந்துப் பார்த்தாள்.

  

மங்கலான இடம் எல்லாம் இப்போது தெளிவாக தெரிந்தது. பார்த்த உடனே கண்டுபிடித்துவிட்டாள் மருத்துவமனை என்று மருந்துகளின் நெடியும் அது மருத்துவனை என்பதை நன்றாக ஊர்ஜிதம் செய்துவிட்டது. அக்கம் பக்கம் கண்களை சுழட்டிப் பார்த்தாள் யாரும் இல்லை.

  

ஒருவித கலக்கம் அவளுள் தோன்றியது யாரையாவது அழைக்கலாம் என நினைத்து வாயை திறக்க போராடினாள். பல நாள் வாய் திறவாமல் இருப்பது போல சிரமப்பட்டு அவளது பூ இதழ்கள் விரிந்தது அவள் முதலில் பேசியது,

  

”அம்மா” என்றுதான்,

  

மெல்லிய ஈனக்குரலில் தனது தாய் இந்திராவை அழைத்தாள் பலனில்லை சத்தம் போதவில்லை என்பதை அவளே உணர்ந்தாள் அந்த அறையில் ஏசி இருந்த காரணத்தால் கதவு சாத்தப்பட்டிருந்தது, வெளியில் நடப்பது உள்ளே துளியளவும் கேட்கவில்லை உள்ளே நடப்பது வெளியே கேட்க வாய்ப்பில்லை என்பதை நன்றாக புரிந்துக்கொண்டாள் புத்திசாலியாயிற்றே எந்தவிதமான மோசமான நிலையிலும் அந்த சூழலை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப பழக்கிக்க முயல்பவள்,

  

விடாமுயற்சியை என்றுமே அவள் இழந்ததில்லை நர்ஸோ டாக்டரோ வருவார்கள் அவர்கள் வரும்வரை காத்திருக்க அவள் மனம் நினைக்கவில்லை இப்போதே தன் தாய் தந்தையை காண வேண்டும் என மனது ஆர்பரிக்க தனது குரலை சரிசெய்தாள் இம்முறை சற்று அதிகமாகவே,

  

”அம்மா” என அழைத்தாள் பலனில்லை.

  

புரிந்துப்போனது அவளுக்கு,

  

இனி அழைப்பதை விட எழுவது சிறந்தது என நினைத்தவள் படுத்த படுக்கையில் இருந்து எழுந்து உட்கார போராடினாள்.

  

உடலோ மெலிந்து போய் சக்தியின்றி இருப்பது போல் தோன்றியது ஆனாலும், முயற்சியை கைவிடாமல் எழுந்து அமர முயன்றாள் ஒரு முறை இல்லை 2 முறை இல்லை 5வது முறைதான் அவள் சற்று எழுந்து அமர