சிறு கதை.
“நாளைக்கு டெய்சி பொண்ணு கல்யாணம்... நாம காலையில சீக்கிரம் கிளம்பனும்... ரெண்டு பேரும் லேட் செய்திறாதீங்க... நாலு மணிக்கு எல்லாம் ரெடியா இருங்க....”
மாமியார் கற்பகம் கட்டளை இடுவதுப் போல சொல்லி செல்ல, மருமகள்கள் உமாவும், பாரதியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
கற்பகமும் – டெய்சியும் உயிர் தோழிகள் என்பது ஊரறிந்த ரகசியம்!
“ப்ச்.... சண்டே ஒரு நாள் ரெஸ்ட் எடுக்கலாம்னு பார்த்தால் அன்னைக்கும் சீக்கிரம் கிளம்பனுமா? நான் அப்புறம் வீக் டேஸ்ல காலேஜ்ல போய் தூங்க வேண்டியது தான்!” என்று புலம்பினாள் பாரதி.
“நீயாவது லெக்சரர், ஸ்டாஃப் ரூம்ல அப்பப்போ ரெஸ்ட் எடுக்கலாம். என்னை சொல்லு! நான் என்ன செய்ய முடியும்? நாள் முழுக்க என் குட்டிப் பொண்ணோட மல்லுக் கட்ட வேண்டி இருக்கு!” என தன் பங்குக்கு புலம்பினாள் உமா.
உமாவிற்கு பதில் எதுவும் சொல்லாமல் யோசனையில் இருப்பது போல அமைதியாக இருந்தாள் பாரதி.
“என்ன பாரதி, என்ன யோசிக்குற?”
“கல்யாணம்னு போனால் நிறைய பேரை மீட் செய்யனும்... பாதி பேர் குழந்தை பத்தி கேட்பாங்க... வர வர ரொம்ப எரிச்சலா இருக்கு உமா... எங்கேயும் போகவே பிடிக்கலை...” என்றாள் பாரதி கசப்புடன்.
பாரதிக்கும் – விவேகானந்தனுக்கும் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் நிறைந்திருந்தது.... அவர்களுக்கு இதுவரை குழந்தை இல்லை...
இதைப் பற்றி கற்பகம் தொடங்கி பலரும் பாரதியிடம் கேட்பது உமாவிற்கும் தெரியும்...
எனவே புரிந்துக் கொண்டவளாக,
“விடு பாரதி! அவங்களுக்கு எல்லாம் இதே வேலை! கல்யாணம் ஆச்சா, குழந்தை பிறந்தாச்சான்னு ஃபார்மாலிட்டிக்கு கேட்பாங்க... அப்படி கேட்கலைனா தப்புன்னு கூட சில பேர் மனசில நினைச்சு வச்சிருக்காங்க...” என்றாள் பாரதியை தேற்றும் வண்ணம்!
“ப்ச்... என்னவோ உமா... படிச்சவங்க எல்லாம் கூட அப்படி கேட்குறாங்களே... அவங்க கேள்வி மத்தவங்க மனசை நோகடிக்கும்னு யோசிக்க மாட்டாங்களா? நம்ம டெய்சி ஆன்ட்டி கூட நல்ல டைப் தான்... ஆனால் அவங்க கூட அந்த டாக்டர் போய் பாரு, இந்த டாக்டர் போய் பாருன்னு லாஸ்ட் டைம் சொன்னாங்க... டூ இயர்ஸ் என்பது ரொம்ப பெரிய டைமா? எனக்கென்னவோ இன்னும் கொஞ்ச நாள் வெயிட் செய்துட்டு டாக்டர்ஸ் கன்சல்ட் செய்லாம்னு தோணுது... இப்படி கேட்காமல் அட்வைஸ், சஜஷன்னு தரும் போது கடுப்பா இருக்கு....”
“இல்லை பாரதி, டெய்சி ஆன்ட்டி அப்படி இல்லை... நம்ம அத்தை போய் அவங்க ஃபிரெண்ட் கிட்ட புலம்பி இருப்பாங்க... அவங்க, அவங்க ஃபிரெண்ட்க்காக உன்கிட்ட பேசி இருப்பாங்க... விட்டுத் தள்ளு... எல்லோருக்கும் அடுத்தவங்களுக்கு அட்வைஸ் சொல்றது ஈசி தான்...! இப்போ டெய்சி ஆன்ட்டியையே எடுத்துக்கோ.... ரொம்ப நல்லவங்க தான்... ஆனால் உனக்கு ஒன்னு தெரியுமா? அவங்க அவங்களோட வயசான மாமனார், மாமியாரை சேர்த்துக்குறதே இல்லை... கடைசியா
- பிந்து வினோத்
- பிந்து
- வினோத்
- Bindu Vinod
- Bindu
- Vinod
- shortRead
- shortStory
- Family
- Tamil
- Drama
- Books
- Chillzee_Originals