அத்தியாயம் 12.
“பூர்வி! மீட்டிங் அருமையா போச்சுன்னு கேள்விப் பட்டேன். வாழ்த்துக்கள்.” சில்வியா பூர்வியின் இடத்திற்கே வந்து அவளைப் பாராட்டினாள்.
“ஒன்னும் இல்லாததை எல்லோருமா பெருசா சொல்றீங்க சில்வியா. இன்ட்ரோ மீட்டிங் தானே?” ஒருவர் மாற்றி ஒருவர் புகழ்ந்துக் கொண்டே இருப்பது பூர்விக்கு ஒரு விதத்தில் அலுப்பைக் கொடுத்தது.
சில்வியா புரிந்துக் கொண்டவளைப் போல பூர்வியை ஆச்சர்யத்துடன் கவனித்தாள்.
“சாரி சில்வியா. நான் ரூடா சொல்லனும்னு நினைக்கலை,” என்றாள் பூர்வி.
Tagged under