Chillzee KiMo Books - கண்ணிலே என்ன உண்டு? - பிந்து வினோத் : Kannile enna untu? - Bindu Vinod

கண்ணிலே என்ன உண்டு? - பிந்து வினோத் : Kannile enna untu? - Bindu Vinod
 

சிறு கதை.

 


 

கண்ணிலே என்ன உண்டு?

  

ப்பார்ட்மென்ட் வாயிலில் ஆட்டோவில் இருந்து இறங்கிய சௌபர்ணிகா, ஆட்டோவிற்கான பணத்தைக் கொடுத்து விட்டு, பெட்டியுடன் உள்ளே வந்தாள்.

  

வாசல் கிரில் தட்டப் படும் ஓசைக் கேட்டு எட்டிப் பார்த்த கோமதி, சௌபர்ணிகாவை பார்த்து முகம் மலர்ந்தாள்.

  

“வா சௌபி, உன்னை இன்னமும் காணுமேன்னு நினைச்சிட்டே இருந்தேன்...”

  

“வழியில ஒரே டிராபிக் சித்தி...”

  

“ஆமாம் சென்னையில எது இருக்கோ இல்லையோ ட்ராஃப்பிக்கிற்கு ஒரு குறைச்சலும் இல்லை... அம்மா, அப்பா எல்லாம் நல்லா இருக்காங்களா?”

  

“நல்லா இருக்காங்க... இந்தாங்க இதெல்லாம் உங்களுக்கும் சித்தப்பாவிற்கும் ஸ்பெஷலா அம்மா தந்தது... இது அபிக்கு...”

  

“அட அதிரசமா? உங்க அம்மாக்கு இன்னும் இதெல்லாம் நினைவிருக்கு பாரு...”

  

“அவங்க செய்வதை விரும்பி சாப்பிடும் யாரையும் அம்மா மறக்க மாட்டாங்க சித்தி...” கண்சிமிட்டலுடன் சொல்லி சிரித்தவள்,

  

“ஆமாம் சித்தப்பா ஆஃபிசுக்கு போயாச்சா?” என்றும் விசாரித்தாள்.

  

“ஆமாம்... நீ வந்த உடனே ஃபோன் செய்ய சொன்னார்... நான் அவருக்கு இன்பார்ம் செய்திடுறேன்... அபி வர நாலரை மணி ஆகும்...”

  

“ஓ!”

  

“நீ நாளைக்கு தானே போகனும்? இன்னைக்கு ரெஸ்ட் எடு... போர் அடித்தால் படுத்து தூங்கு...”

  

“போர் எல்லாம் இல்லை சித்தி... கொஞ்சம் ப்ரிப்பேர் செய்யனும்... ரொம்ப ஆர்வத்தோடு வந்திருக்கேன்.. மூணு மாசம் இன்டர்ன்ஷிப் தான், ஆனாலும் நல்லா செய்யனும்...”

  

“உனக்கென்ன சௌபி, நீ நல்லா தான் செய்வ...” என்ற கோமதி, ஒரு சில வினாடிகள் இடைவெளி விட்டு,

  

“ஆமாம் நீ அந்த கஸ்தூரியோடவா மூணு மாசம் வேலை செய்ய போற?” என்றுக் கேட்டாள்.

  

சௌபர்ணிகாவின் கண்கள் பளிச்சிட்டன...

  

“ஆமாம் சித்தி. உங்களுக்கு அவங்களை தெரியுமா? அவங்களோட கூட வேலை செய்ய இப்படி ஒரு சான்ஸ் கிடைக்கும்னு நான் எதிர்ப்பார்க்கவே இல்லை...”

  

சௌபர்ணிகாவிற்கு சிறு வயது முதலே பத்திரிக்கை துறையில் ஆர்வம் அதிகம். அதிலும் கஸ்தூரியின் கட்டுரைகள் அவளுக்கு மிகவும் பிடிக்கும்... பெண்கள் பற்றி கஸ்தூரி எழுதும் கட்டுரைகள் படித்து தான் அவளுக்கு அந்த துறையில் ஆர்வம் வந்தது என்று சொன்னாலும் கூட மிகையில்லை...

  

அவளின் ஆர்வத்தை அவளின் பெற்றோரும் தடுக்கவில்லை... பள்ளி