Chillzee KiMo Series - என் மேல் ஆசை இல்லையா? - நவ்யா : அத்தியாயம் 11

 

11.

  

னனிக்கு உமேஷ் அப்படி வந்து நின்றது பிடிக்கவில்லை. அதற்காக தர்மா, காருண்யா  முன்பு அவனை திட்டவும் முடியவில்லை.

  

அதனால் உமேஷ் இருப்பதையே மறந்து விட்டு தர்மாவிடம் பேசத் தொடங்கினாள்.

  

“வணக்கம் மிஸ்டர் தர்மா.”

  

“எனக்கு அதிர்ச்சியா இருக்கு ஜனனி. நீங்க சின்ன பொண்ணுன்னு கன்யா சொன்னா. விடியோஸ்ல பார்த்திருக்கேன். அப்போ கூட இவ்வளவு யங்கா இருப்பீங்கன்னு எதிர்பார்க்கலை.” என்றான் தர்மா ஆச்சர்யத்துடன்.

  

“நான் அப்படி ஒன்னும் யங் இல்லை சார். ஆல்மோஸ்ட் தர்ட்டி.”

  

உமேஷ் ஜனனியின் பேச்சில் குறுக்கிட்டான்.

  

 
 
 

Chillzee KiMo Series - என் மேல் ஆசை இல்லையா? - நவ்யா : En mel acai illaiya - Navya