அத்தியாயம் 11.
ஜாவேத்தின் முகத்தில் எந்த விதமான மாற்றமும் தெரியவில்லை.
“அப்போ சரி பூர்வி! எல்லா ஊரையும் போல இங்கேயும் நல்லதும் இருக்கு, கெட்டதும் இருக்கு. அப்ராட்ல இருந்து வந்ததால உங்களுக்கு சொல்லலாம்னு யோசித்தேன்,“ என்று மட்டும் சொன்னார்.
“தாங்க்ஸ் ஜாவேத். நான் நிறைய வருஷம் இந்தியால வொர்க் செய்திருக்கேன். கல்யாணத்துக்கு அப்புறம் தான் லண்டன் போனேன். அதனால இப்போ ரொம்ப கஷ்டமா இல்லை. எனக்காக கேர் எடுத்து கேட்டதுக்கு தேங்க்ஸ்,” என்றாள் பூர்வி மனதின் எண்ணங்களை காட்டிக் கொள்ளாமல்.
“இதுவும் என் வேலையில ஒன்னு பூர்வி. நீங்க இன்னும் என் டீம்ல தான் இருக்கீங்க. உங்களுக்காக நான் அக்கறை எடுத்து தான் ஆகனும்.”
Tagged under