ஒரு சிறு கதை.
சிறுகதை – தலைக்கனம் – சசிரேகா.
”காலேஜ் படிச்சி முடிச்சி 2 வருஷம் ஆகுது, இன்னும் ஒரு வேலை தேடிக்காம வெட்டியா பொழுது ஓட்டறியே இது நல்லாவாயிருக்கு” என கோபமுடன் கேட்டார் ராஜா தன் மகனிடம்,
”காலேஜ் இப்பதான் முடிஞ்சிருக்கு படிச்சி படிச்சி நான் களைச்சி போயிட்டேன்ப்பா, கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுக்க கூடாதா” என கேட்டான் ரகு,
”ரெஸ்ட் எடுக்க உனக்கு 2 வருஷம் தேவைப்படுதா”,
”ப்ச் இப்ப என்னதான் பிரச்சனை உங்களுக்கு”,
”மத்தவங்களை பாரு உன்கூட படிச்சவங்களுக்கு எல்லாம் வேலை கிடைச்சி இப்ப கைநிறைய சம்பாதிக்கறாங்க, நீ என்னடான்னா எந்நேரமும் வீட்லயே இருக்க, அக்கம் பக்கம் வீட்டுக்காரங்க உன்னைப் பத்தி என்கிட்ட கேட்கறப்ப பதில் சொல்ல முடியலை என் கஷ்டம் புரியுதா உனக்கு”,
”இப்ப என்ன ஊரு உலகத்துக்காக நான் வேலைக்கு போகனுமா, இது தப்பு ஊருக்காக நாம வாழக்கூடாது, நமக்காகதான் நாம வாழனும், நாம கஷ்டப்பட்டப்ப என்ன ஊரா நம்மளை பார்த்துச்சி”,