Chillzee KiMo Books - வா வா என் தேவதையே... - பிந்து வினோத் : Va va en tevataiye... - Bindu Vinod

வா வா என் தேவதையே... - பிந்து வினோத் : Va va en tevataiye... - Bindu Vinod
 

சிறு கதை.

 

 

வா வா என் தேவதையே...

  

ன்னப்பா பொண்ணை பிடிச்சிருக்கா???”

  

“பிடிச்சிருக்கு... ஆனால்.... நான் பொண்ணு கூட கொஞ்சம் தனியா பேசனும்..."

  

அவன் சொன்னதைக் கேட்டு ராஜ்கிரண் ரேஞ்சிற்கு முறைத்தார் பெண்ணின் அப்பா.

  

"அதுக்கென்ன பேசுங்க..." இது பெண்ணின் அம்மா.

  

ராஜ்கிரணின் பார்வை இப்போது அவரின் மனைவி பக்கம் சென்றது.

  

"இதெல்லாம் இப்போ ரொம்ப சாதாரணமா நடக்குறது தானேங்க..."

  

ஒருவழியாக (வேறு வழி இல்லாமல்) மனம் இளக சரி என்றார் அவர்.

  

??❀✿?

  

வளின் முகத்தில் பரபரப்பு தெரிந்தது... அவன் அவளை தேற்றும் வண்ணம் புன்னகைத்தான்.

  

“இரண்டு குடும்பத்திலேயும் எல்லாம் பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டாங்க, உனக்கு என்னைப் பிடிச்சிருக்கா?”

  

“ம்ம்ம்ம்...” தலை அசைத்தாள் அவள்.

  

“எல்லோரும் சொல்றதைப் போல நான் கூட இப்போ எதுக்கு கல்யாணம்னு தான் யோசிச்சிட்டு இருந்தேன்... உன் போட்டோ பார்த்த உடன் மனசை மாத்திக் கிட்டேன்...”

  

“நானும் கூட அப்படி தான்...”

  

சின்ன தயக்கத்துடன் பேசினாள் அவள்...

  

இருவரும் தங்களின் உரையாடலை தொடர்ந்தார்கள்...

  

அவளின் தடுமாற்றம் மெல்ல மெல்ல குறைந்தது...

  

“... உன் கிட்ட நேரா பேசவும் சான்ஸ் கிடைச்சதுல ரொம்ப சந்தோஷம்... இப்போ ரொம்ப ஹாப்பியா இருக்கேன்...”

  

அவள் பதில் சொல்லாமல் புன்னகைத்தாள்.