அத்தியாயம் 9.
பூர்வி தன்னுடைய ப்ராஜக்ட்டிற்காக இன்டர்வியூ செய்தவர்களின் பெயர்களையும், அவர்கள் சொன்ன விபரங்களையும் ஆய்வு செய்துக் கொண்டிருந்தாள். மொத்தம் பத்து பேரை அவள் தேர்வு செய்யவேண்டும். இதற்காக கிட்டத்தட்ட ஐம்பது பேரை அவர் நேர்காணல் செய்திருந்தாள்.
அதில் சில்வியா, ஜாவேத் சிபாரிசு செய்தவர்கள் பதினைந்துப் பேர்.
அந்த பதினைந்தில் இருவர் மட்டுமே பூர்வியின் கணக்கிற்கு தேர்ச்சி பெற்றிருந்தார்கள்.
அவர்களை தவிர அவளுக்கு ஏற்றதாக பட்ட மற்ற எட்டுப் பெயர்களையும் எழுதி வைத்தாள்.
பூர்வி எவ்வளவு முயற்சி செய்தாலும் முழு மனமும் அந்த வேலையில் ஈடுப்பாடுக் காட்ட மறுத்தது. மொபைலில் வந்திருந்த ஆபாசமான விடியோக்கள் திரும்ப திரும்ப நினைவில் வந்து அவளை திகிலடைய செய்துக் கொண்டிருந்தது.
Tagged under