Chillzee KiMo Book Reviews - காதல் என்னும் அழகியே... - ஸ்ரீஜா வெங்கடேஷ்

Chillzee KiMo வில் பப்ளிஷ் ஆகி இருக்கும் ஸ்ரீஜா வெங்கடேஷின் நாவல் காதல் என்னும் அழகியே...

 

கதை சம்மரி:

தையின் ஹீரோயின் ரம்யா, ஹீரோ சிவராமன்!

ரம்யாவும் சிவராமனும் மனம் ஒன்றுப் பட்ட தம்பதிகள். சந்தோஷமாக போய் கொண்டு இருக்கும் அவர்களுடைய வாழ்க்கையில் சிவராமனின் முன்னால் காதலி சுமதி வழியாக சின்ன சலனம் ஏற்படுகிறது.

பணக்காரியான சுமதியை கஷ்டப்படும் நிலைமையில் மீண்டும் சந்திக்கிறார் சிவராமன். அவளுடைய நிலைமைக்கு தான் தான் காரணமோ என்ற கில்டி எண்ணம் அவருக்கு ஏற்படுகிறது. மனைவியிடம் தன் பழைய காதலை பற்றி ஒப்பிக்கிறார்.

சுமதியின் நிலைமையை பற்றி தான் சிவராமன் கவலைப் படுகிறார் என்பதை புரிந்துக் கொள்கிறாள் ரம்யா.

அவருக்காக சுமதியின் வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகளை புரிந்துக் கொண்டு சீர் செய்ய முயற்சி செய்கிறாள்.

சுமதியின் வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனை என்ன? பணக்காரியான சுமதி இந்த நிலைமைக்கு வர காரணம் என்ன? ரம்யாவின் முயற்சி வெற்றிப் பெற்றதா என்பது மீதிக் கதை.

 

தையின் முக்கிய கேரக்டராக வரும் ரம்யா மனதில் நிற்கிறாள்.

 

திருமணமாகி இவ்வளவு ஆண்டுகள் ஆனப் பிறகும் மெச்சுரிட்டி இல்லாமல் இருக்கும் சுமதி ரம்யா சொன்ன உடனே அதை கேட்பதும்,  அப்படியே செய்வதும் ஆச்சர்யத்தைக் கொடுக்கிறது.

 

 

எந்த ஒரு நிலைமையில் இருந்தும் மீண்டு எழுந்து வாழ்க்கையை சீர் செய்ய முடியும் என்ற நல்ல கருத்தை சொல்லி தலை நிமர்ந்து நிற்கிறது கதை. கதையில் மிளிரும் பாசிட்டிவிட்டி பாராட்டக்கூடியது.

 

 

மொத்தத்தில், குடும்ப வகை கதை வாசகர்களை கவரும் நல்ல ஒரு கதை.

 

கதையை இது வரை படிக்கவில்லை என்றால் கட்டாயம் படியுங்கள்.

 

அடுத்து ஸ்ரீஜா வெங்கடேஷின் ‘பொன் அந்திச் சாரல் நீ...’ நாவல் சம்மரியுடன் சந்திப்போம்.

- அபூர்வா