Chillzee KiMo Book Reviews - பூங்கதவே தாள் திறவாய் - பத்மினி செல்வராஜ்

Poonkathave thaal thiravaai

Chillzee KiMo exclusive KiMo Only ஆக பப்ளிஷ் ஆகி இருக்கும் முதல் நாவல் பத்மினி செல்வராஜின் ‘பூங்கதவே தாள் திறவாய்

 

கதை சம்மரி:

ஹீரோ அபிநந்தன் பொறுப்பெடுத்துக் கொண்டிருக்கும் புது கம்பெனியில் வேலை செய்கிறாள் ஹீரோயின் பிரதீக்சா. அவளை முதல் முறை பார்த்தது முதலே அபிநந்தனின் மனசுக்குள் கலர்ஃபுல் எண்ணங்கள் தோன்றுகிறது. அபிநந்தனை முதல் முறை நேராக சந்திக்கும் போது முகத்தில் மாறுதலை காட்டும் பிரதீக்சா அதற்கு பிறகு ஸ்ட்ரிக்ட் ஆபிசராகவே நடந்துக் கொள்கிறாள்.

பிரதீக்சா ஆறு மாத கர்ப்பிணி என்று தெரிந்ததும் ரொம்பவே குழம்பிப் போகிறான் அபிநந்தன். ஏற்கனவே திருமணமான பெண்ணின் மீது மனதை செலுத்துவது தப்பு என்று புரிந்தாலும் மனதை கட்டுப் படுத்த முடியாமல் தவிக்கிறான். அதுவும் பிரதீக்சாவின் வயிறில் இருக்கும் குழந்தை மீது அவனுக்கு ஏற்படும் அதிகபடியான அன்பிற்கும் காரணம் புரியாமல் குழம்புகிறான்.

அபிநந்தனுக்கு தீக்சாவின் குழந்தை மீது ஏற்படும் இந்த அன்பிற்கு காரணம் என்ன? பிரதீக்சாவின் கணவன் யார்? அபிநந்தனின் காதல் என்ன ஆனது என்பது மீதிக் கதை.

 

தையில் வரும் கேரக்டர்களில், நீரும் – நெருப்புமாக வரும் பிரதீக்சா மனசில் தங்குகிறார். கோபப் படும் & அடம் பிடிக்கும் இடங்களிலும் ரசிக்க வைக்கிறார். இன்ட்ரஸ்டிங்கான ஒரு ஹீரோயின் கேரக்டர்!

 

உண்மையை தெரிந்த உடன் மகள் பக்கம் ஒரு செகண்ட் கூட பேசாத அம்மா சின்ன நெருடல் ஆனால் அவருடைய வலிகளை அவர் சொல்லும்  போது அவர் பேச்சின் பின்னே இருக்கும் விபரங்களை புரிய வைக்கிறார்.

 

அபிநந்தன் தன் கை மீறி நடந்து விட்ட நிகழ்வுகளில் மாட்டிக் கொண்டு மீண்டு வெளி வருவது கதையின் சுவாரசியம். கதையின் பெரும் பகுதி இவரை சுற்றியே நடப்பதால் சுவாரசியம், சஸ்பென்ஸ் என அனைத்தையும் தாங்கும் பொறுப்பு இவருக்கே. அதை சூப்பராக செய்கிறார்.

 

மொத்தத்தில் சஸ்பென்ஸ் & பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ஒரு சாப்ட் ரொமான்டிக் கதை.

 

கதையை இது வரை படிக்கவில்லை என்றால் கட்டாயம் படியுங்கள்.

 

அடுத்து ஸ்ரீயின் ‘காதல் கள்வனே’ நாவல் சம்மரியுடன் சந்திப்போம்.

 

பூங்கதவே தாள் திறவாய் போல இன்னும் பல இனிமையான, தரமான கதைகளை ரிலாக்ஸ்டாக படிக்க, இன்றே Chillzee KiMo பக்கம் செல்லுங்கள். சப்ஸ்க்ரிப்ஷன் ரூபாய் 50/- முதல் தொடங்குகிறது!

- அபூர்வா