Chillzee KiMo வின் திரு சுஜித் நினைவு தமிழ் - ஆங்கிலப் போட்டிக்காக ஸ்ரீஜா வெங்கடேஷ் பகிர்ந்து இருக்கும் நாவல் 'கடல் நிலவு - ஸ்ரீஜா வெங்கடேஷ் [ Kadal nilavu - Srija Venkatesh ]' .
அந்த நாவலைப் பற்றி இங்கே பார்ப்போம்.
கதை சம்மரி:
மதன், ராகவ், அஸ்வின் மூவரும் சிறு வயது முதலே நண்பர்கள். மூன்றுப் பேருக்கும் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பினால் ஒன்றாக தற்கொலை செய்துக் கொள்ள முடிவு செய்கிறார்கள். கடலில் விழப் போகும் அவர்களை மர்மமான முறையில் ஒரு பெரியவர் தடுக்கிறார். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு டாலரை கொடுத்து மறைமுகமாக அந்தமான் தீவிற்கு பயணம் செய்ய சொல்கிறார்.
ஒரு மாறுதலாக இருக்கும் என்று முடிவு செய்து நண்பர்கள் மூன்று பேரும் அந்தமானுக்கு போகிறார்கள். வழியில் ஏற்படும் விபத்தினால் கற்பகத்தீவு என்ற தீவிற்கு வருகிறார்கள்.
அங்கே இருக்கும் மக்கள் இவர்களை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். என்ன நடக்கிறது என்று புரியாமல் தவிக்கும் நண்பர்களுக்கு அங்கே மூன்று பெண்கள் அறிமுகமாகிறார்கள். கற்பகத்தீவு என்பது சாதாரண மனிதர்களும் வசிக்கும் தீவு இல்லை என்பதை புரிந்துக் கொள்கிறார்கள்.
மெதுவாக நண்பர்கள் மூன்று பேரும் அவர்கள் அங்கே வந்திருப்பதன் பின்னால் காரணம் இருப்பதை புரிந்துக் கொள்கிறார்கள்.
அப்படி அவர்கள் வந்திருக்கும் காரணம் என்ன? அது நிறைவேறியதா? என்பது மீதி கதை.
வித்தியாசமான ஃபேன்டஸி கதையை எழுதி இருக்கிறார் ஸ்ரீஜா.
மொத்தத்தில் விறுவிறுப்பான, வித்தியாசமான நாவல் பிரியர்களுக்கு பிடித்தமான ஒரு கதை.
அடுத்து Chillzee KiMo வின் திரு சுஜித் நினைவு தமிழ் - ஆங்கிலப் போட்டிக்காக பத்மினி செல்வராஜ் பகிர்ந்திருக்கும் ரகசிய சிநேகிதனே!!! - பத்மினி செல்வராஜ் : Ragasiya Snegithane!!! - Padmini Selvaraj நாவல் அலசலுடன் மீண்டும் சந்திக்கலாம்.