கதைக்குள்ளே செல்லுமுன் உங்களோடு ஒரு வார்த்தை...
"காதல் என்னும் அழகியே" என்ற இந்தக் கதை காதல் கதை ஆனால் சற்றே வித்தியாசமானது.
கல்லூரி நாட்களில் காதலிக்கும் இரு இளைஞர்கள் காலத்தால் பிரிகின்றனர். அவனுக்கு வாழ்க்கை வெற்றிகளை அள்ளித்தர, பாவம் அவள் என்ன ஆனாள்? மிகப்பெரிய நிறுவனத்தின் பொது மேலாளராக இருக்கும் அவன் தன் முன்னாள் காதலியை துப்புரவுத் தொழிலாளியாக ஏன் பார்க்க நேர்ந்தது?
அவன் என்ன செய்யப் போகிறான்?
அவனுக்கும் அவன் மனைவிக்கும் உள்ள உறவு என்ன ஆகும்?
இவற்றைப் பற்றித்தான் பேசுகிறது கதை. ஆனால் நிச்சயமாக ஒரு நல்ல வழியைத்தான் சொல்கிறதே அன்றி ஒழுக்கக் கேட்டை ஒரு நாளும் பேசாது.
இக்கதையின் கதாநாயகன் மீது நீங்களும் காதல் கொள்ளலாம். அதை விட அவன் மனைவியை நேசிக்கலாம்.
படித்து விட்டு என்னோடு உங்கள் கருத்தைக் கட்டாயம் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே!