Online Books / Novels Tagged : from_Chillzee - Chillzee KiMo

சூப்பர் ஜோக்ஸ் 02 - அனுஷா

வாய் விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும்!

உங்களுடைய கவலை, வருத்தம்,  தனிமை, போர் என எதில் இருந்தும் தப்பிக்க இந்த சூப்பர் ஜோக்ஸ் கலக்ஷனைப் படியுங்கள்.

 

Published in Books

கங்கை ஒரு மங்கை - ரவை

 

ரவை எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு - 7

01. அவ ரொம்ப பாவம்மா!

02. தாய்க்கு செய்த பிராயச்சித்தம்!

03. நாத்திகரா, ஆத்திகரா?

04. பறிபோன பரிவட்டம்!

05. அலகிலா விளையாட்டுடையான்!

06. கங்கை ஒரு மங்கை

07. பாட்டியின் மனக்குறை

08. எல்லோரும் நல்லவரே!

09. அதற்குப் பெயர் தியாகமல்ல!

10. புதிய போர்வீரன்!

Published in Books

வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - பிந்து வினோத்

ஆகாஷ் - அக்ஷ்ராவின் குடும்பங்கள் சொந்தம் போல நெருங்கிய நட்புடன் பழகும் குடும்பங்கள். இரண்டு குடும்பங்களின் பெரியவர்களும் ஆகாஷ், அக்ஷராவின் சம்மதத்துடன் அவர்களுக்கு திருமணம் நிச்சயம் செய்கிறார்கள். நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு சினேகாவை சந்திக்கிறான் ஆகாஷ். அவள் மீது ஈர்க்கவும் படுகிறான். ஒரு பக்கம் வீட்டில் மும்முரமாக திருமண ஏற்பாடுகள் நடக்க, ஆகாஷின் மனம் சினேகாவை மறக்க முடியாமல் தவிக்கிறது. பெரியவர்களின் மனதை வருத்தவும் முடியாமல், மனதிற்கு பிடித்தவளை மறக்கவும் முடியாமல் இருக் கொல்லி எறும்பாக தவிக்கிறான் ஆகாஷ்.

பெரியவர்களின் மனம் நோகாமல் ஆகாஷின் காதல் நிறைவேற முடியுமா? அக்ஷரா நிலைமை என்ன? சினேகா ஆகாஷின் காதலை ஏற்றுக் கொள்வாளா?

தெரிந்துக் கொள்ள கதையைப் படியுங்கள்!

Published in Books

தவமின்றி கிடைத்த வரமே - பத்மினி செல்வராஜ்

நாயகன் வசீகரன் ஒரு புகழ் பெற்ற இதய  அறுவை சிகிச்சை நிபுணன்... ஒவ்வொருவர் இதயத்திலும் எந்த மாதிரியான குறை இருந்தாலும் அதை கண்டறிந்து குணபடுத்தி வெற்றி கண்டவன்....

அப்படிபட்ட நம்  நாயகன் ஒரு பெண்ணின் இதயத்தில் என்ன இருந்தது என்று கண்டு பிடிக்க முடிந்ததா?? கண்டு பிடித்து குணபடுத்த முடிந்ததா??  என்பதை அறிந்து கொள்ள இந்த கதையை தொடர்ந்து படியுங்கள்.....

இதுவும் ஒரு ஜாலியான காதல் கலந்த கதை...இந்த கதையும் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன்.. Happy Reading!!! 

Published in Books

நீ வருவாய் என… - அமுதினி

முன்னுரை 

வணக்கம் நண்பர்களே! "நீ வருவாய் என..." இது ஒரு அழகான காதல் கதை. காதல் என்பது இரண்டு மனம் சம்மந்தப்பட்டது மட்டும் அல்ல. அது இரண்டு குடும்பங்களின் சந்தோஷம் சம்பந்தப்பட்டது. அதை உணர்ந்து காத்திருந்து தங்கள் காதலை எல்லோருடைய ஆசீர்வாதத்துடனும் நிறைவேற்றி கொள்ளும் போது கிடைக்கும் சுகம் பலமடங்கு. நந்தா-அபி, ஆதி- நந்து இந்த இரு ஜோடிகளின் காதலும் நட்பும் பாசமும் பிரிவும் தான் இந்த கதை.

இதை முதலில் தொடராக வெளியிட்ட சில்சீக்கு என் மனமார்ந்த நன்றிகள். இப்போது இதை சில்சீ "KiMo"வில் பிரசுரிப்பதை மகிழ்ச்சியுடன் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். 

நன்றி,

அமுதினி

Published in Books