Online Books / Novels Tagged : chillzee - Chillzee KiMo

இதோ ஒரு காதல் கதை பாகம் 1 - பூர்ணிமா செண்பகமூர்த்தி

முன்னுரை:

வாழ்க்கையில் நாம் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்று என்பது எல்லாருக்கும் மிகவும் சாதாரணம். படிப்பைத் தவிர வேறொன்றும் என் நினைவில் இல்லை, நான் காதல் வசப்படமாட்டேன் என்னும் மனவுறுதி கொண்ட ரம்யா என்ற இளம்பெண்ணும், தனக்கே அவள் உரிமையானவள் என்னும் கண்மூடித்தனமான காதல் கொண்ட தினேஷ் என்ற இளைஞனும் அவர்களின் கல்லூரி நாட்களில் நடத்தும் கண்ணாமூச்சி ஆட்டம் தான் “இது ஒரு காதல் கதை”. கதையில் வரும் பெயர்களும், சம்பவங்களும் யாரையும் குறிப்பிடுவன அல்ல.

Published in Books

மதியூர் மிஸ்ட்டரீஸ் - 01 - உன்னை கண் தேடுதே...! - Chillzee Originals

சமர்ப்பணம்:

பெண்களை முன்னிலைப் படுத்தி பேமிலி - ரொமான்ஸ் - த்ரில்லர் - மிஸ்டரி நாவல்கள் எழுதி, எங்களையும் இந்தக் கதையை எழுத தூண்டிய மறைந்த 'மேரி ஹிக்கின்ஸ் கிளார்க்' அவர்களுக்கு இந்த நாவல் எங்களின் அன்பு சமர்ப்பணம்!

 

கதையைப் பற்றி:

'கண்ணால் காண்பது பொய்' என்பது எப்போதும் உண்மையா?

ஊர் முழுதும் தவறாக பேசும் அஹல்யாவை நல்லவள் என்று நம்புகிறான் அபினவ். அவளை திருமணம் செய்துக் கொள்ளவும் விரும்புகிறான்.  எதனால் அஹல்யாவை பற்றி தவறான செய்தி பரவியது என்று அவன் கண்டுப்பிடிக்க உதவுகிறாள் சத்யா. அவளுடைய புதிய தோழி சக்தியும் அவளுக்கு உதவுகிறாள். அஹல்யா உண்மையில் நல்லவள் தானா?

நம் கதாநாயகிகளுடன் பயணம் செய்து நாமும் தெரிந்துக் கொள்வோம்.

இது ஒரு குடும்பம் - காதல் -  மர்மம் நிறைந்த கதை!

Published in Books

நிஜ வாழ்க்கை காதல் கதைகள் - Chillzee Originals

காதல் கதைகள் படிப்பது நம் அனைவருக்குமே பிடித்த ஒரு விஷயம்.

கதை எனும் கற்பனை உலகை தாண்டி நிஜ உலகிலும் பல அழகான காதல் கதைகள் இருக்கின்றன.

அப்படி கண்ணில் பட்டு, கருத்தில் பதிந்த பத்து நிஜ வாழ்க்கை காதல் ஜோடிகளின் கதை தொகுப்பு இங்கே.

Published in Books

கற்றுக் கொடு கண்ணாலே... - Chillzee Originals

காதலை கற்றுத் தந்து படிக்க முடியுமா??

இந்த நாவலின் கதாநாயகியுடன் பயணம் செய்து நாமும் தெரிந்துக் கொள்வோம்!

இது ஒரு எளிய, இனிய காதல் கதை!

Published in Books

வெற்றி'யின் செல்வி - Chillzee Originals

காதல் - எப்போது, எப்படி, யாரிடம் வரும் என்பது யாருக்கு தெரியும்.

இந்த கதையின் கதாநாயகி அந்த காதலை உணரும் பொழுதை நாமும் அவளுடன் சேர்ந்து தெரிந்துக் கொள்வோம்.

வெற்றி'யின் செல்வி எனும் இந்த காதல் கதை, ஒரு ஜனரஞ்சகம் நிறைந்த காதல் + குடும்ப கதை.

Published in Books
Page 4 of 4