கதை சுருக்கம்:
வேலையே உலகம் என்று இருக்கும் அகிலா லே-ஆஃப் ஆன மன வருத்தத்தில் இருந்து தப்பிக்க ஹெவன் ஐலான்டிற்கு வருகிறாள். அங்கே அவள் தங்கும் ஹோட்டலில் ஆனந்த் அவளுக்கு அறிமுகம் ஆகிறான். அகிலாவின் மனம் ஆனந்தின் வசம் செல்கிறது! ஆனந்த் அந்த ஹோட்டலில் பணி புரிபவன் என்று அகிலா நினைக்க, அவனோ விஜயத் தீவின் இளவரசன் என்பது தெரிய வருகிறது. அகிலாவை புரிந்துக் கொள்ளும் ஆனந்த், தங்கள் தீவை சுற்றி இருக்கும் பொருளாதார நெருக்கடியில் இருந்து பாதுகாக்க அகிலாவின் உதவியை நாடுகிறான்.
அகிலாவும் ஆனந்திற்காக உதவ சம்மதிக்கிறாள். விஜயத் தீவில் ஆனந்தின் அக்கா பிறைநிலா, அவளுக்காக நிச்சயம் செய்யப் பட்டிருக்கும் இளவரசன் விஜயன் ஆகியோரையும் அகிலா சந்திக்கிறாள். பிறைநிலா - அகிலா நடுவே முதல் சந்திப்பு முதலே 'கேட் - மவுஸ்' பனிப்போர் நடக்கிறது! ஆனால் விஜயத் தீவு மக்கள் அனைவரும் பிறைநிலாவின் மீது அதிக அன்பு வைத்திருக்கிறார்கள். அதுவும் ஆனந்தை விட அவள் மீது அதிக அன்பு வைத்திருக்கிறார்கள். அது எதனால் என்று அகிலாவிற்கு புரிய மறுக்கிறது! தனக்கே உரிய ஆர்வக் கோளாரினால் அதையும் தெரிந்துக் கொள்ள முயலுகிறாள்!
எதனால் பெரியவர்கள் நிச்சயம் செய்த பிறைநிலா - விஜயன் திருமணம் தடைப் பட்டு நிற்கிறது? ஆனந்த் - அகிலா காதலை பிறைநிலா ஏற்றுக் கொள்வாளா? விஜயத் தீவின் பிரச்சனைகள் எப்படி தீர்ந்தது? அகிலா - பிறைநிலா தங்கள் பனிப்போரை எப்படி முடிவுக்கு கொண்டு வந்தார்கள்???
கதையை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!
இளவரசி ரோஹினி பிடிக்காத திருமணத்தில் இருந்து தப்பிக்க சென்னைக்கு வருகிறாள். அங்கே தான் யார் என்று சொல்லாமல் சாரதாவின் வீட்டில் தங்குகிறாள். அப்போது சாரதாவின் மகன் அஜய் மீது காதல் வசப் படுகிறாள். அவள் யார் என்ற உண்மை தெரிந்தால் அஜய் என்ன நினைப்பானோ என்ற கலக்கத்தில் உண்மையை சொல்லாமல் மறைக்கிறாள். அவள் பயத்தை நிஜமாக்குவதுப் போல அவள் மறைத்து வைத்த அரச வாழ்வு அவளை தேடி வந்து சேருகிறது.
அஜய்க்கு உண்மை தெரிந்ததா? ரோஹினி அரசக் குடும்பத்திற்கான கடமையை ஏற்றுக் கொள்வாளா அல்லது அஜய் மீதான காதலை தொடர்வாளா?